ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவிற்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகளா ? இதோ புகைப்படம்.

0
1444
mohanraja
- Advertisement -

இயக்குனர் மோகன் ராஜாவின் அழகிய குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் பிரபல நடிகர் ‘ஜெயம்’ ரவியின் சகோதரர், பிரபல எடிட்டர் மோகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன் ராஜா முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு ஹனுமன் ஜங்ஷன் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். தனது முதல் படமே வெற்றியடைய அதன் பின்னர் தமிழில் தனது சகோதரர் ஜெயம் ரவியை வைத்து ‘ஜெயம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

2003-ஆம் ஆண்டு தமிழில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் மோகன் ராஜாவிற்கும் மட்டுமின்றி ரவிக்கும் ஹீரோவாக இதுவே முதல் படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து ‘ஜெயம்’ ரவியை வைத்து M.குமரன் S/O மகாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி இருந்தார் மோகன் ராஜா. இப்படி இவர் இயக்கிய பல படங்கள் ரீமேக் படங்கள் தான்.

இதையும் பாருங்க : பள்ளிப்பருவ மாணவனை அன்று ஆச்சரியத்தில் ஆழ்த்திய கமல் – சிறு வயதில் விக்ரம் படத்தை பார்த்த அனுபவம் குறித்து வசந்தபாலன் போட்ட குட்டி ஸ்டோரி.

- Advertisement -

மோகன் ராஜா திரைப்பயணம்:

இதனால் இவருக்கு பலரும் ரீமேக் பட இயக்குனர் என்று பெயர் வைத்தார்கள். இதனை முறியடிக்க இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் நடிகர் ஜெயம் ரவியை வைத்து தனி ஒருவன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து பல விருதுகளையும் தட்டிச் சென்று இருந்தது. அதன் பிறகு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘வேலாயுதம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார் மோகன் ராஜா.

மோகன் ராஜா இயக்கிய படங்கள்:

அதன் பின் இவர் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனை வைத்து ‘வேலைக்காரன்’ என்ற படத்தினை இயக்கி இருந்தார். தற்போது இவர் நடிகர் பிரசாந்தை வைத்து படம் இயக்குகிறார். பாலிவுட்டில் கடந்த ஆண்டு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ‘அந்தாதுன்’. இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இது பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படம் ஆகும். இந்த திரைப்படம் இந்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையம், வசூலையும் பெற்று இருந்தது.

-விளம்பரம்-

மோகன் ராஜா இயக்கும் படம்:

‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாக தான் இந்த படம் உருவானது. இந்த படத்தை தான் மோகன்ராஜா தமிழில் ரீமேக் செய்கிறார். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்கிறார். மேலும், இந்த படத்தின் தமிழ் உரிமையை அவரது தந்தை தியாகராஜன் பெற்று இருக்கிறார். பிரசாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரியில் நல்ல கைதேர்ந்த பியானோ கலைஞர் என்பதால் தான் இந்த படத்தில் நடிக்க சரியாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

மோகன் ராஜா குடும்ப புகைப்படம்:

இந்நிலையில் மோகன் ராஜா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், நேற்று மே 30 ஆம் தேதி மோகன் ராஜாவிற்கு பிறந்தநாள். அனைவரும் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறி இருந்தார்கள். மோகன் ராஜா தன்னுடைய பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை தான் இவர் டீவ்ட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் அழகிய குடும்பம்! என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement