யாரவது ஒரு படத்த 1000 முற பாப்பாங்களா – கேலிக்கு உள்ளான தான் பேச்சு குறித்து மிஸ்கின் பதிலடி.

0
531
Mysskin
- Advertisement -

தன்னைக் குறித்து வந்த மீம்ஸ்களுக்கு மிஸ்கின் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். தற்போது இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

- Advertisement -

மிஸ்கின் திரைப்பயணம்:

மேலும், மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று பிசாசு. கடந்த 2014 ஆம் ஆண்டு ‘பிசாசு’ திரைப்படம் வெளியாகி இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பேயை அன்பான பேயாக காட்டியது என்றால் அது இந்த படத்தின் மூலம் தான். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.

வீடியோவில் 2 : 16 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

பிசாசு 2 படம்:

மேலும், முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும், இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்தில் மிஸ்கின் கூறியிருந்தார். இந்த பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து இருக்கிறார். கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மிஸ்கின் அளித்த பேட்டி:

இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் மிஸ்கின் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, எனக்கு மிகவும் பிடித்த படம் என்றால் செவன் சாமுராய். இந்த படத்தை நான் 1000 முறை பார்த்துவிட்டேன். யாராவது ஒருவர் சோகமாக, கஷ்டமாக இருந்தால் நான் இந்த படத்தை தான் பார்க்க சொல்வேன். அந்த அளவிற்கு மனரீதியாக குணப்படுத்தும் படமாக செவன் சாமுராய் இருக்கிறது. இந்த படத்தை இன்னும் நான் 2000 முறை பார்க்கணும் என்று செவன் சாமுராய் படத்தை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

கிண்டல் செய்தவருக்கு மிஸ்கின் கொடுத்த பதிலடி:

இப்படி இவர் அளித்திருந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கிண்டலடித்த கமெண்ட்ஸ் போட்டிருந்தார்கள். இதுகுறித்து இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கூறியிருந்தது, நான் ஆயிரம் முறை எல்லாம் செவன் சாமுராய் படத்தை பார்க்கவில்லை. அதை ஒரு தோரணைக்காக சொன்னது. ஒரு பெண் அழகாய் இருக்கிறாய் என்பதை பேரழகி என்பதை பெருமைப்படுத்தி சொல்லுவோம். அதே மாதிரி தான் அந்த படத்தை நான் பெருமைப்படுத்தி சொன்னேன். அதை 1000 என்று கணக்கெல்லாம் போடுவது சிரிப்பாக இருக்கிறது. இந்த மாதிரி வந்த கமெண்டுகளை என்னுடைய அசிஸ்டன்ட் சொன்னார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement