சினிமாவில் நுழைந்ததற்கான காரணத்தை மிஸ்கின் முதன் முதலாக மனம் திறந்து அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். தற்போது இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார்.

அதன் பின் இவர் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இது பலரும் தெரிந்த ஒன்று.

இதையும் பாருங்க : பெயர் மட்டுமல்ல மகளை இந்திய பாரம்பரியதுடன் வளர்த்து வரும் ஸ்ரேயா – தன் மகளுக்கு செய்துள்ள விஷயம்.

Advertisement

மிஸ்கின் திரைப்பயணம்:

மேலும், மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று பிசாசு. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த ‘பிசாசு’ திரைப்படம் வெளியாகி இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பேயை அன்பான பேயாக காட்டியது என்றால் அது இந்த படத்தின் மூலம் தான். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார். மேலும், முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும்

பிசாசு 2 படம்:

இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்தில் மிஸ்கின் கூறியிருந்தார். இந்த பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து இருக்கிறார். மேலும், கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.

Advertisement

மிஸ்கின் அளித்த பேட்டி:

இந்நிலையில் மிஸ்கின் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய சம்பளம் குறித்து கூறியிருப்பது, நான் சினிமாவுக்கு வந்தது மிகப்பெரிய விபத்து என்று சொல்லலாம். நான் வேலை பார்த்த இடத்தில் 1,200 ரூபாய் சம்பளம் கிடைத்தது. அதே சினிமா சூட்டிங்கில் போனால் 1500 ரூபாய் கிடைக்கும் என்று சொன்னார்கள். அதுக்காக தான் சினிமாவுக்குள் வந்தேன். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நான் 72 தொழில்கள் பார்த்திருக்கிறேன். இதை நிறைய பேர் நம்புவார்களா? என்று எனக்கு தெரியாது. நம்பவில்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை.

Advertisement

சம்பளம் குறித்து மிஸ்கின் சொன்னது:

இது சத்தியமான ஒன்று. நான் உதவி இயக்குனராகனும், மணிரத்னம் மாதிரி ஆக வேண்டும் என்று யோசிப்பதில்லை. சினிமாவை ஒப்பிடும் போது மற்ற தொழில்களில் பெரிய அளவு உழைப்பு இருக்காது. வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு போனால் அந்த தொழிலுக்கும் எனக்கும் தொடர்பு இருக்காது. ஆனால், சினிமா என் வாழ்க்கையாக மாறிவிட்டது. அதன் பிறகு அதை நேசிக்க ஆரம்பித்து விட்டேன். இங்கு தான் என் வாழ்க்கை அர்த்தப்படணும் என்று தோன்றியது. பிறகு அதற்கு பெரிய உழைப்பை கொடுக்க ஆரம்பித்தேன். ஒரு காதலி மாதிரி சினிமாவை நேசிக்க ஆரம்பித்தேன். அந்த காதல் இன்னும் எனக்கு குறையவில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement