பெயர் மட்டுமல்ல மகளை இந்திய பாரம்பரியதுடன் வளர்த்து வரும் ஸ்ரேயா – தன் மகளுக்கு செய்துள்ள விஷயம்.

0
456
Shriya
- Advertisement -

நடிகை ஸ்ரேயா மகளின் காதணி விழா புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. மேலும், இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
shriya

அதன் பின்னர் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரேயா திருமணம்:

இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். பின் ஸ்ரேயா திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் வெளிநாட்டிலே ஸ்ரேயா செட்டில் ஆனார். மேலும், திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மீண்டும் ஸ்ரேயா சினிமாவில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் இருந்து அவர் விலகிவிட்டார்.

ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை பிறந்தது:

அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா தனக்கு குழந்தை பிறந்து இருக்கு என்று திடீரென்று அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தார். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பிரபலங்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை படு வித்தியாசமாக அறிவிப்பார்கள். அதுமட்டுமல்லாமல் கர்ப்பமான முதல் நாள் முதல் குழந்தை பிறக்கும் வரை விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து அதை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஸ்ரேயா மகளின் பெயர்:

ஆனால், ஸ்ரேயா கர்ப்பமாக இருப்பதை கூட அறிவிக்காமல் படு சீக்ரெட்டாக வைத்து குழந்தை பிறந்து பல மாதங்கள் கழித்தே அறிவித்தார். குழந்தை பிறந்த பின் தன் மகளின் புகைப்படத்தை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். “ராதா சரண் கோஸ்சீவ்“ என்று இவருடைய மகளுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள் ஸ்ரேயா. அவ்வப்போது தன் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும், வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஷ்ரேயா.

ஸ்ரேயா மகளின் காதணி விழா:

இந்த நிலையில் தற்போது ஸ்ரேயா தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார். அது என்னவென்றால், தற்போது ஸ்ரேயா அவர்கள் தன்னுடைய மகளின் ராதாவிற்கு காது குத்தி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தை தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்குகளை குவித்து ஸ்ரேயாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement