விமர்சகர்களை இப்படி மோசமாக பேசினேனா ? – பத்திரைகையில் வந்த தலைப்பிற்கு மிஸ்கின் விளக்கம்.

0
379
myskkin
- Advertisement -

பத்திரிக்கை வெளியிட்ட செய்திக்கு மிஸ்கின் வெளியிட்டு உள்ள அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். தற்போது இவர் கோலிவுட்டில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார்.

-விளம்பரம்-
myskin

அதன் பின் இவர் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று பிசாசு.

- Advertisement -

பிசாசு படம்:

கடந்த 2014 ஆம் ஆண்டு ‘பிசாசு’ திரைப்படம் வெளியாகி இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பேயை அன்பான பேயாக காட்டியது என்றால் அது இந்த படம் மூலம் தான். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார். முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும், இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய மிஸ்கின் அவர்கள் கூறியிருந்தார்.

pisasu-2

பிசாசு 2 படம்:

இந்த பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து இருக்கிறார். கௌரவ கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் மிஸ்கின் அவர்கள் வார பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.

-விளம்பரம்-

மிஸ்கின் அளித்த பேட்டி:

அதில் அவர், என்னுடைய படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என்று கூறியிருந்தார். இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் மிஸ்கின் அறிக்கை மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என் படத்தை விமர்சித்தவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டதை பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். தலைப்பு சுவையாக இருக்கவேண்டும் என நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்துகொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள்.

மிஸ்கின் வெளியிட்ட அறிக்கை:

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. என் படத்தை பாருங்கள். படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். படம் நன்றாக இல்லை எனில் கடுமையாக விமர்சியுங்கள். அதோடு இந்த கருத்து இப்போதல்ல என் முதல் படத்திலிருந்தே சொல்கிறேன். விமர்சிப்பது அனைவரின் உரிமை. மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி மிஸ்கின் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.

Advertisement