6 மாசம் விஜய் கிட்ட பேசல, லிப்ட் என் கழுத்த புடிச்சி ஏன் இதை சொல்லலைனு கேட்டார் – இயக்குனர் மிஸ்கின் பேட்டி.

0
9242
mysskin
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களாக ஜொலித்து வரும் எத்தனையோ பேர் ஆரம்பத்தில் துணை இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் தான். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கினும் ஒருவர். இயக்குனர் மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் உதவி இயக்குனராக இருந்த போது இயக்குனர் மிஸ்கின் விஜய் படத்தில் நடித்துள்ளளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வின்சன்ட் செல்வா இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான யூத் படத்தில் மொட்டை தலையுடன் ஒரு சிறு காட்சியில் தோன்றியுள்ளார் மிஸ்கின். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மிஸ்கின், விஜய் குறித்து பேசியதாவது, நான் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தபோது ஆறுமாதம் விஜயிடம் நான் எதுவுமே பேசவில்லை.

இதையும் பாருங்க : குண்டாக இருந்ததால் கில்லி படத்தில் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் – விஜய் பட நடிகை பேட்டி.

- Advertisement -

பின்னர் ஆறு மாதம் கழித்து என் கழுத்துக்கு பின்னால் என் கழுத்தை பிடித்து ஏன் அண்ணா என்னிடம் பேசவே மாட்டேங்கிறீங்க என்று கேட்டார். அதற்கு நான் உங்களை நான் ஒரு கதையோடு தான் சந்தித்து பேசவேண்டும் என்று கூறினேன். அதன் பின்னர் நான் சித்திரம் பேசுதடி படத்தை எடுத்து முடித்து விட்டு விஜய்க்கு அதை போட்டுக் காண்பித்தேன். அப்போது லிப்டில் சென்று கொண்டிருக்கும்போது இந்த கதை உங்களுக்காக தான் முதலில் எழுதினேன் என்று கூறினேன். அதற்கு விஜய் என் கழுத்தை பிடித்து இழுத்து என்னை லிப்டில் தள்ளி இந்த கதையை ஏன் எனக்கு சொல்லவில்லை என்று கூறினார்.

வீடியோவில் 6 நிமிடத்தில் பார்க்கவும்

அதன் பின்னர் நான் வெவ்வேறு படங்களை இயக்க ஆரம்பித்து விட்டேன். விஜய் அஜித் போன்ற நடிகர்களுக்கு என்னுடைய கதை செட் ஆகாது. அதற்கென்று ஒரு காலம் அமையும். அதேபோல விஜய்காக இரண்டு மூன்று கதைகளை நான் எழுதி வைத்திருக்கிறேன். கமல் சாரை மனதில் வைத்து எழுதிய கதையை விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கதை ஒரு பௌத்தாரை பற்றிய கதை அது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கதையாக இருக்கும். இப்போது இல்லை என்றாலும் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் விஜய்க்கு அந்த கதையை சொல்வேன் அதில் அவர் சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.

-விளம்பரம்-
Advertisement