மிஸ்கின் செயலால் 10 ஆண்டுகள் பேசாமல் இருந்துள்ள விஜய் சேதுபதி – பின்னர் அவர் படத்திலேயே நடித்த காரணம். வீடியோ இதோ.

0
625
Myskkin
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். அந்த வகையில் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ திரைப்படமும் ஒரு ஹிட் பேய் படமாக இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பேயை அன்பான பேயாக காட்டியது என்றால் அது இந்த படத்தின் மூலம் தான்.

-விளம்பரம்-
Mysskin

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். மேலும், முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய மிஸ்கின் அவர்கள் கூறியிருந்தார். இந்த பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

- Advertisement -

பிசாசு 2 படம் பற்றிய தகவல்:

மேலும், கௌரவ தோற்றத்தில் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் மிஸ்கின் அவர்கள் விஜய் சேதுபதி குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நந்தலாலா படத்தின் ஆடிசனுக்கு விஜய் சேதுபதி வந்திருந்தார். அப்போது அவர் சினிமாத் துறைக்குள் நுழைந்த ஆரம்பம். அப்போது நான் அந்த படத்தின் நடிகர்கள் தேர்ந்தெடுப்பதற்காக பரபரப்பாக இருந்தேன்.

மிஸ்கின் மீது விஜய் சேதுபதி கோபமாக இருக்க காரணம்:

நிறைய பேர் வந்து இருந்தார்கள். பின் விஜய் சேதுபதியும் நடித்துக் காண்பித்தார். அவர் பிரமாதமாக பண்ணி இருப்பார். ஆனால், எனக்கு இம்ப்ரஸ் ஆகவில்லை. அதனால் வேணாம் என்று ரிஜெக்ட் செய்துவிட்டேன். அதை அவர் மனதில் வைத்துக் கொண்டு 10 வருடம் என் மீது கோபமாக இருந்து பேசவே இல்லை. இதை அவர் என்னுடைய தம்பியிடம் கூறி இருந்தார். நானும் நல்லது தான், ஒரு நடிகனுக்கு இந்த குணம் முக்கியமான ஒன்று தான், அப்படியே இருக்கட்டும் என்று சொன்னேன். அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாமே நல்ல சூப்பர் ஹிட் கொடுத்தது. பிறகு பத்து வருடம் கழித்து நானே விஜய் சேதுபதியை கூப்பிட்டுப் பேசினேன். அவர் சாதாரணமாக என்னிடம் பேசினார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி-மிஸ்கின் உறவு:

அப்போது படம் பண்ணுவது பற்றி பேசினோம். ஆனால், அவர் என்னிடம் கால்ஷீட் இல்லை என்று சொன்னார். பிறகு மூன்று வருடம் கழித்து விஜய் சேதுபதி என்னை மீட் பண்ணினார். அப்போது உங்களுடைய சைக்கோ படம் பார்த்தேன். சூப்பராக வந்திருக்கிறது என்று ரொம்ப நேரமாக நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சமாக மது அருந்திக்கொண்டு ஒரு எட்டு, பத்து மணி நேரம் பேசியிருந்தோம். பிறகு இன்னொரு நாளும் இதே போல் நாங்கள் சந்தித்து நிறைய விஷயங்களைப் பேசினோம். அவர் என்னை என்னங்கய்யா என்று தான் கூப்பிடுவார். நானும் சொல்லு மகனே என்று கூப்பிடுவேன். அந்த அளவிற்கு எங்களுடைய உறவு மாறியது.

விஜய் சேதுபதி குறித்து மிஸ்கின் கூறியது:

பின் பத்து நாள் கழித்து எனக்கு விஜய் சேதுபதி போன் பண்ணார். அப்புறம் நம்ம பேசினா படம் ரெடி ஆகிவிட்டதா? என்று கேட்டார். நானும் அந்த படம் தான் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி இரண்டு நாள் நடிக்கணும் என்று சொன்னவுடன் அவரும் ஓகே என்று சொல்லி விட்டார். உண்மையை சொல்லப்போனால் ஒரு நட்புக்காக சொல்லவில்லை. ஒரு சக நடிகனாக, அவர் பணத்திற்காக இல்லாமல், பந்தா ஏதும் இல்லாமல் இரண்டு நாள் மட்டும் படம் நடித்துக் கொடுத்தார். அந்த அளவிற்கு நேர்மையான மனிதர். நிஜமாகவே விஜய் சேதுபதி நடிகர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதர் என்று விஜய் சேதுபதியை குறித்து மிஸ்கின் புகழ்ந்து பாராட்டி இருந்தார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement