‘நயன்தாரா கண்டிப்பாக முதலமைச்சர் ஆவாங்க, ஜாதகத்திலே இருக்கு’ – கெட்டவன் பட இயக்குனர் நந்தவனம் நந்தகுமார்

0
29
- Advertisement -

பிரபல நடிகை நயன்தாரா குறித்து இயக்குனர் நந்தகுமார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதற்கிடையில் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விக்கி- நயன் ஜோடி வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள். ஆனால், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண பந்தத்தில் இணைந்த நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். சமீபத்தில் கூட, நடிகர் தனுஷூடன் பிரச்சனை, விக்னேஷ் சிவன் போகும் இடமெல்லாம் பிரச்சனை என எங்கு பார்த்தாலும் பிரச்சனைகள் சூழ இருக்கிறார்கள்.

- Advertisement -

நந்தவனம் நந்தகுமார் பேட்டி:

இந்நிலையில், நயன்தாராவின் திருமண வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்து கெட்டவன் பட இயக்குனர் நந்தவனம் நந்தகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில், நயன்தாரா பொய் சொல்லி விக்னேஷ் சிவனை திருமணம் செய்யணும்னு அவசியம் கிடையாது. விக்னேஷ் சிவன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்தார். ஒருவேளை அவர் அதை நயன்தாராவிடம் மறைத்திருக்கலாம். அவருக்கு ‘போடா போடி’ படம் எடுத்த சமயத்தில் தான் லவ் ஃபெயிலியர் ஆச்சு. அந்த விஷயம் எனக்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

நயன்தாராவிடம் இருப்பது கஷ்டம்:

மேலும், நயன்தாரா எல்லா விஷயத்தையும் நேர்த்தியை எதிர்பார்ப்பாங்க. அவங்களுக்கு தனக்கு பிடிச்சவங்க மேல பொறாமை அதிகம். அவர்களை எந்த சூழ்நிலையிலும் தன்னை விட்டுப் போக அனுமதிக்க மாட்டாங்க. 24 மணி நேரமும் தனக்கு பிடித்தவர்களுடன் இருக்கணும்னு நினைப்பாங்க. அதனால அவங்க கூட வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது ரொம்ப கஷ்டம் தான். எல்லா விஷயத்தையும் கேள்வி கேப்பாங்க. அவங்க எல்லா பெண்களுக்கும் பிடித்த ஒருத்தர் எனக்கு வேண்டாம் என்றுதான் விக்னேஷ் சிவனை கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க.

-விளம்பரம்-

தனுஷுடன் என்ன பிரச்சனை:

ஆனால், விக்னேஷ் சிவனின் உண்மையான முகம் தனுஷிற்கு நல்லா தெரியும். அதனாலதான் நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது தனுஷுக்கு பிடிக்கல. நயன்தாரா நல்லா இருக்கணும்னு தான் அதை தனுஷ் பண்ணினாரு. ஒருவேளை தனுஷ் பேச்சை நயன்தாரா கேட்டிருந்தால், சினிமாவுலயும் அவங்க வாழ்க்கை நல்லா இருந்திருக்கலாம். இங்க எல்லா உறவுகளும் பிசினஸ் நோக்கத்துல தான் சென்று கொண்டிருக்கிறது. அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் அப்புறம்தான். மேலும், நயன்தாராவின் ஜாதகத்தின்படி அவர் முதலமைச்சராக வருவாங்க.

நயன்தாரா முதலமைச்சர் ஆவார்:

ஆனால், அவங்க விஜய்யோட எல்லாம் போய் சேர மாட்டாங்க. திமுகவில் போய் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அவங்க தனது குடும்ப வாழ்க்கையை திறந்துவிட்டு அரசியலுக்கு வந்தால் அவர் முதலமைச்சர் ஆவார். அவங்களோட ஆட்சி ஜெயலலிதா ஆட்சி மாதிரி இருக்கும். இதை நாங்க நயன்தாராவோட ஜாதகத்தை திருவல்லிக்கேணி முருகேசன் கிட்ட போய் பார்த்தப்போ தெரிஞ்சிகிட்டோம். அதே மாதிரி புதுக்கோட்டை கிருஷ்ணகுமார்ன்னு ஒரு பெரிய ஜோதிடர் இருக்காரு. அவரும் நயன்தாரா முதலமைச்சர் ஆவார் என்று தான் சொன்னாரு என்று பேட்டியில் நந்தகுமார் பேசி இருக்கிறார்.

Advertisement