மாமன்னன் படம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் பதிவிட்டு இருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார்.

இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

Advertisement

மாமன்னன் படம்:

இப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை பார்த்து முதல்வர் மு க ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. அதோடு இந்த படம் இதுவரை 50 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஞ்சித் அளித்திருக்கும் ட்விட்:

இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், மாமன்னன் படம் பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் சமூக நீதியை கொள்கையாகக் கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் ஜாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டி இருக்கிறது.

Advertisement

பட்டியலின மக்கள் குறித்து சொன்னது:

தற்போது உண்மையாகவே தனித்தொகுதி எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான ஒரு சிறந்த சான்றாக மாமன்னன் படம் இருக்கிறது.

Advertisement

திமுக குறித்து சொன்னது:

திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார். அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக உதயநிதி ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்றவர் மாரி செல்வராஜ். வடிவேலு மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement