தமிழகம் வளர்ந்தது திராவிடர்களால் இல்லை – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் பேரரசு

0
447
- Advertisement -

திராவிடம் குறித்து இயக்குனர் பேரரசு அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் பேரரசு. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்தது. அதுமட்டுமில்லாமல் பேரரசு படங்கள் என்றாலே சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படமாக இருக்கும்.

-விளம்பரம்-

சமீபகாலமாக இவருடைய படங்கள் வெளியாகாமல் இருக்கிறது. ஆனால், இவர் நிறைய பட விழாவில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் பட விழாவில் ஆபாச வீடியோ பதிவிடும் பெண்களை கைது செய்ய வேண்டும் என்று இயக்குனர் பேரரசு பேசி இருந்த கருத்து சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் ப்ளூ சட்டை என்ற குறும்பட விழாவில் இயக்குனர் பேரரசுக்கும், நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

ஆரகன் படம்:

இப்படி சமீப காலமாகவே இயக்குனர் பேரரசு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். இந்நிலையில் திராவிடர்கள் குறித்து படத்தின் விழாவில் இயக்குனர் பேரரசு பேசியிருக்கும் கருத்து சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, அறிமுக இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஆரகன். இந்த படத்தில் தங்கதுரை ஹீரோவாக நடித்திருக்கிறார். கவிப்பிரியா ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.

perarasu

விழாவில் பேரரசு கூறியது:

இந்த படம் கூடிய விரைவில் வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட குழுவினருடன் இயக்குனர் பேரரசு, சுப்பிரமணிய சிவா, பாடல் ஆசிரியர் சினேகன் உட்பட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு கூறியிருந்தது, கடந்த 50 வருடங்களாக தமிழகம் வளர்ந்தது திராவிடர்களால் என்று இயக்குனர் சுப்பிரமணிய சிவா இங்கே பேசி இருந்தார்.

-விளம்பரம்-

திராவிடம் குறித்து சொன்னது:

ஆனால், அது உண்மை இல்லை. தமிழர்களால் தான் தமிழகம் வளர்ந்தது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் தமிழ் அறிவால் தான் கதை எழுதினார்களே தவிர, திராவிட அறிவால் இல்லை. மேலும், பொன்னியின் செல்வன் ஒரு படம் அல்ல. அது ஒரு சவால். எம்ஜிஆர், கமல் ஆகியோர் காலத்தில் இருந்தே இந்த படத்தை எடுக்க பலபேர் முயற்சி இருந்தார்கள். ஆனால், அது முடியாமல் போனது. இப்போது மணிரத்தினம் எடுத்து சாதித்து இருக்கிறார்.

perarasu

சினேகன் குறித்து சொன்னது:

விஜய் நடித்த திருப்பாச்சி படத்தை இயக்க ஆரம்பித்தில் சினேகன் என்னுடைய படத்தில் பாடல் எழுத வேண்டும் என்று விரும்பினேன். அப்போது அவரிடம் சொல்வதற்காக நானே டம்மியாக சில வார்த்தைகளை போட்டு இப்படி தான் பாடல் எழுத வேண்டும் என்று அவரிடம் காட்டினேன். அதை பார்த்துவிட்டு இந்த பாட்டே நல்லா தான் இருக்கு என்று கூறி பாட்டு எழுதும் வாய்ப்பை எனக்கே கொடுத்தார். எனக்குள் இருந்த கவிஞனை வளர்த்து விட்டதே சினேகன் கவிஞன் தான். அதற்கு விஜய்யும் எனக்கு உற்சாகம் கொடுத்திருந்தார் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement