அப்படி பண்ணும் பொண்ணுங்கள எல்லாம் ஜெயில்ல போடணும் – பேரரசு ஆவேசம். வைரலாகும் வீடியோ.

0
628
perarasu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பேரரசு. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத்தந்தது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் என்றாலே சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படமாக இருக்கும். சமீபகாலமாக இவருடைய படங்கள் வெளியாகாமல் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ஆபாச வீடியோ பதிவிடும் பெண்களை கைது செய்ய வேண்டும் என்று இயக்குனர் பேரரசு பேசிய தகவல் தற்போது
சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Ace director Perarasu warns debut heroes

ரெயின்போ புரோடக்சன் தயாரிப்பில் வரதராஜ் தயாரித்திருக்கும் படம் பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பேரரசு கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பேசியது, இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றி பேசுகிறது. சிலருடைய செயல்களை பார்க்கும் போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை என்பது ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

- Advertisement -

அந்த பெண்களை ஜெயிலில் போட வேண்டும் :

ஏன்னா, சோசியல் மீடியா மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசிய பேச்சும் சகிக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் வேலைகளை பார்க்கும்போது அருவருப்பாக உள்ளது. இவர்களை எல்லாம் பிடித்து ஜெயிலில் உள்ளே தள்ள வேண்டும். அந்த அளவிற்கு அவர்களுடைய செயல்கள் உள்ளது. இவர்கள் எல்லாம் விட்டுவிடக்கூடாது. அதேபோல் நாட்டில் நடக்கும் பல கலாச்சார சீர்கேடுகளுக்கு செல்போன் தான் காரணம். பொதுவாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இதை பெற்றோர்கள் புரிந்து கொண்டு கவனமாக இருந்தாலே நம் நாட்டில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதுமட்டுமில்லாமல் பல தியாகிகள் போராடி வாங்கி தந்த சுதந்திரம் நாடு இப்படி மோசமாக போய்க்கொண்டிருக்கிறதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அதிலும் அளவற்ற சுதந்திரத்தால் நம் நாடு கெட்டுப் போகிறது. அதுமட்டுமில்லாமல் செல்போனில் ஃபுல் டாக்டைம் என்பதை முதலில் ஒழித்துக்கட்ட வேண்டும். அது இருப்பதனால் தான் தேவையில்லாத நேரங்களில் எல்லாம் பேசிக் கொண்டும், தேவையில்லாத வழிகளிலும் இன்றைய இளைஞர்கள் செல்கிறார்கள்.

-விளம்பரம்-

பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் :

இப்படி நாடு சென்று கொண்டிருக்கும் போது நாம் எத்தனை சமூக ரீதியான அறிவுறுத்தும் படங்கள் எடுத்தாலும் இவர்கள் திருந்த போவதில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பெண்களை தவறாக பயன்படுத்துவது என்று படங்களில் நடக்கிறது. நாம் நம்பிக்கையோடு பெண்களை அனுப்பிவைக்கப்படும் போது சில ஆசிரியர்கள், சில மதகுருமார்கள் என்று எத்தனையோ வடிவில் பிரச்சனைகள் வருகிறது. பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். ஆசிரியர், சாமியார் என்று யாராக இருந்தாலும் சரி அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி அவர்களுக்கான தண்டனை கொடுக்க வேண்டும்.

perarasu

பொள்ளாச்சி செய்தி எல்லாம் என்னாச்சு?

அதேபோல் சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்பது ஒரு நாள் செய்தியை போல கடந்து போகிறது. எத்தனையோ செய்திகளை நாம் தினமும் பார்க்கிறோம். அதை அப்படியே மறந்து விடுகிறோம். பொள்ளாச்சி செய்தி எல்லாம் என்னாச்சு? இப்போது யாரும் அதைப் பற்றி பேசுவது கூட கிடையாது. எல்லாம் செய்தியாகவே கடந்து போய்விட்டது. ஆனால், இந்த படம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ளது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement