‘சாதியை வைத்து லாபம் பார்க்குறாங்க’ ஆம்ஸ்ட்ராங்க் சம்பவம் – இயக்குனர் பேரரசு வெளியிட்ட அறிக்கை

0
268
- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவமாக இயக்குனர் பேரரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார்.

-விளம்பரம்-

இவரை வீட்டுக்கு அருகில் வெட்டி கொலை செய்தார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 14 பேரை போலீஸ் கைது செய்திருக்கிறது.

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் சம்பவம்:

இதில் திருவேங்கடம் என்பவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையை என்கவுண்டரில் போலீஸ் சுட்டுக் கொலை செய்திருந்தார்கள். பின் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டு வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பா. ரஞ்சித் அவர்கள் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பேரரசு அறிக்கை:

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி இயக்குனர் ரஞ்சித் இந்த பேரணியை நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இது தொடர்பாக இயக்குனர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ஒருவர் கொலை செய்யப்பட்டால் அதற்கான காரணம் என்ன? பின்னணி என்ன? என்பதை ஆராய்வதை விட அதை அரசியல் கொலையாகவும், சாதி கொலையாகவும் மாற்றிவிடவே பலரும் துடிக்கின்றனர்.

-விளம்பரம்-

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து சொன்னது:

அனுதாபம் காட்டுவதை விட சுயலாபம் பார்க்கவே பலர் துடிக்கின்றனர். மேலும், ஒரு கட்சி இன்னொரு கட்சியை பழி சொல்வது, இறந்தவர் மீது சாதி வளையம் வைத்து சாதி கொலையாக மாற்ற துடிப்பது எல்லாம் சமூகத்திற்கு ஆரோக்கியமானது கிடையாது. கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதை நோக்கி தான் அனைவரும் நகர வேண்டும். சிலரின் யூகங்கள் சமூகத்தில் தேவையில்லாத சலசலப்பை உண்டாக்கும்.

பேரரசு திரைப்பயணம்:

எல்லாவற்றிற்கும் சாதியை முன்னிறுத்துவது நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து விடும் என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் பேரரசு. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் பேரரசு படங்கள் என்றாலே சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படமாக இருக்கும். சமீப காலமாக இவர் படங்களை இயக்குவது இல்லை.

Advertisement