ஓசிலதானே படம் பார்க்குறீங்க ?பேரரசு கேள்வியால் அதிர்ந்துபோன பத்திரிகையாளர்கள். ப்ளூ சட்டையின் பதிவு.

0
264
perasau
- Advertisement -

ப்ளூ சட்டை குறும்படம் விழாவில் படத்தின் நடிகர் பத்திரிகையாளர்களை அவமதித்து இருக்கிறார் என்று ப்ளூ சட்டை மாறன் கண்டனம் தெரிவித்து இருக்கும் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் ப்ளூ சட்டை என்ற குறும்பட விழா சென்னையில் நடந்தது. இந்த குறும்படத்தில் படங்களை கடுமையாக விமர்சனம் செய்பவர்களின் நாக்கை அறுப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கு நடிகர் பயில்வான் ரங்கநாதன் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். பின் கடுமையாக விமர்சிப்பது தவறு தான். இருந்தாலும், அதற்காக நாக்கை அறுப்பது போன்ற காட்சியை வைக்கலாமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் பேரரசு விழாவில் கூறியிருப்பது, நான் சினிமா உலகில் நுழைந்த போது உதவி இயக்குனராக 10 வருடங்கள் கஷ்டப்பட்டு இருந்தேன்.

- Advertisement -

எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர் பேரரசு:

பின் இயக்குனராக ஐந்து வருடங்கள் ஆனது. மொத்தம் 15 வருடங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன். என்னால் ஊருக்கு கூட போக முடியாது. பல சிரமங்களுக்கு பிறகு ஒரு படம் இயக்கி வெளிவரும்போது பிறர் கடுமையாக தாக்கி, தரக்குறைவாக எழுதி மனதை காயப்படுத்தினால் அந்த புது இயக்குனரின் மனம் என்ன பாடுபடும். மேலும், ஒரு படத்தை கடுமையான சொற்களால் விமர்சனம் செய்து எழுதுபவர்கள் தங்கள் சொந்த காசில் படம் எடுக்க வேண்டும்.

நடிகர் கார்த்தி கூறி இருப்பது:

பின் அந்த படத்தை பார்த்து விமர்சனம் எழுத வேண்டும். ஓசியில் படம் பார்த்து எழுதக் கூடாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதேபோல் படத்தில் நடித்திருக்கும் கார்த்தி அவர்கள் விழாவில் பேசி இருந்தது, தயவுசெய்து விமர்சனம் செய்பவர்கள் சொந்தக் காசு கொடுத்து படம் பார்த்துவிட்டு பண்ணுங்கள். ஓசியில் ரிவ்யூ பண்ணாதீர்கள் என்று பேசி இருந்தார். இதை படக்குழுவினர் கைதட்டி வரவேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை மாறன் டுவிட்டர்:

தற்போது இந்த வீடியோவை ப்ளூ சட்டை மாறன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, படத்தின் நடிகர்
கார்த்தி ரீவியூ பண்ணுறவங்க சொந்த காசுல டிக்கெட் எடுத்து படம் பாருங்க. ஓசில பாக்காதீங்க என்று பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர்களை அவமானப்படுத்தி இருக்கிறார். இதை படக்குழுவினர் ஆமோதித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement