3 கதை ரெடி, 2 வருசமா பாலோ பண்ணுறேன்,ஆனா – விஜய்க்கு ஹிட் படங்களை கொடுத்த பேரரசுவின் பரிதாப நிலை. (நெல்சனுக்கு கொடுத்ததுக்கு இவருக்கு கொடுத்திருக்கலாம்)

0
184
perarasu
- Advertisement -

தளபதி விஜய்க்கு கதை ரெடியாக இருக்கிறது என்று இயக்குனர் பேரரசு அளித்துள்ள பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் காத்து கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-
Beast Movie Review | பீஸ்ட் விமர்சனம்

இதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். பின் விஜய் மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்?

- Advertisement -

பீஸ்ட் பட விமர்சனங்கள்:

இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்று சிலர் கூறுகின்றனர். படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கேஜிஎஃப் 2 படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பீஸ்ட் படம் ஒன்றும் இல்லை என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும், விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் வந்து இருந்தாலும் வசூலில் பீஸ்ட் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் பேரரசு அளித்த பேட்டி:

முதல் நாள் வசூலில் முந்தைய படங்களின் சாதனையை பீஸ்ட் முறியடித்து முந்தைய கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் பீஸ்ட் படம் விமர்சனங்களை சந்தித்து வருவதால் ரசிகர்கள் சிலர் விஜய் அவர்கள் திருப்பாச்சி, சிவகாசி போன்ற ஆக்ஷன், சென்டிமென்ட் கதைகளை தேர்வு செய்து நடிக்கலாம் என்று அட்வைஸ் கூறி இருக்கின்றார்கள். இந்த நிலையில் இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, விஜய்க்காக நான் கதையை தயாராக வைத்து இருக்கிறேன்.

-விளம்பரம்-

விஜய்க்கு கதை ரெடி:

கடந்த இரண்டு வருடங்களாக அவரை நான் ஃபாலோ செய்து வருகிறேன். அவரை வைத்து படம் பண்ண நான் ரெடி, அவர் தான் கூப்பிட வேண்டும். எனக்கு இடைவெளி விழுந்துவிட்டது. அவரது மார்க்கெட் வேற லெவல். பட்ஜெட் வேற லெவல். இதையெல்லாம் தாண்டி பேரரசுக்கு திறமை இருக்கிறது என்று அவர் கூப்பிட்டால் நான் ரெடி என்று கூறியிருக்கிறார். இப்படி இயக்குனர் பேரரசு அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

இயக்குனர் பேரரசின் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பேரரசு. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத்தந்தது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் என்றாலே சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படமாக இருக்கும். சமீபகாலமாக இவருடைய படங்கள் வெளியாகாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement