அரசாங்கத்திற்கு இயக்குனர் பேரரசு வைத்து இருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் சகாயநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் செல்ல குட்டி. இந்த படத்தில் புதுமுகங்கள் தான் ஹீரோ, ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படத்தில் டாக்டர். டிட்டோ, மகேஷ், தீபிக்ஷா, சிம்ரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற நான்காம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் உடன் இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர் வி உதயகுமார், செயலாளர் பேரரசு, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே. ராஜன் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆக பதவியேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
விழாவில் இயக்குனர் பேரரசு:
கலைக் குடும்பத்திலிருந்து வந்து நடிகராக பயணித்து தற்போது துணை முதல்வராக வந்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். சின்ன படங்களை எப்படி காப்பாற்றுவது? சின்ன படங்களுக்கு மக்களை எப்படி தியேட்டருக்கு வர வைப்பது? என்று தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் என்று ஒவ்வொரு சங்கமுமே அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக இந்த நிகழ்ச்சியிலும் பேசப்பட்டது.
https://www.youtube.com/watch?v=VV7KNmWgOoI
திரைத்துறை பற்றி சொன்னது:
இந்த திரை துறையில் இருந்து ஒருவர் துணை முதல்வராக தேர்வாகி இருக்கிறார். இதுகுறித்து நாம் அவரிடம் பேச வேண்டும். எம்ஜிஆர் காலத்திலும், ரஜினி காலத்திலும் சரி , ஏன் இருபது வருடங்களுக்கு முன்பு வரை திரைப்படம் என்பது ஏழைகளுக்கான சாதனம் தான். உழைக்கும் மக்கள் களைப்பு தீர போகும் ஒரே இடம் தியேட்டர் தான். ஆனால், இன்று அந்த நிலைமை அப்படியே மாறி இருக்கிறது. டிக்கெட் விலை, பார்க்கிங் விலை என்று எல்லாமே சாதாரண மக்கள் திரையரங்கிற்கு வர முடியாத அளவிற்கு உயர்த்தி இருக்கிறார்கள்.
பேரரசு வைத்த கோரிக்கை:
பணக்காரர்கள், ஏழைகள், நடுத்தர மக்கள் என அவரவர்கள் பார்க்க தனித்தனி தியேட்டர் வேண்டும். அதனால் நம்முடைய துறையிலிருந்து துணை முதல்வராக இருக்கும் ஒருவர் சினிமாவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஏழைகள் சாப்பிட அம்மா உணவகம் கொண்டு வந்தது போல ஏழைகள் படம் பார்ப்பதற்காக திரையரங்கை அரசாங்கம் கட்ட வேண்டும். இதற்கு இதுதான் தீர்வு தவிர டிக்கட் விலை குறைக்கவோ, ஜிஎஸ்டி குறைக்கவோ, வரியை குறைக்கவோ சொல்ல முடியாது. ஏழைகளுக்கான திரையரங்கை அரசு உருவாக்க வேண்டும் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

பேரரசு திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் பேரரசு. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பேரரசு படங்கள் என்றாலே சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படமாக இருக்கும். அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் எடுத்த சிவகாசி, திருப்பாச்சி போன்றவை பெரிய வெற்றி படங்கள் என்று கூறலாம். தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.






