மனோஜ் பாரதிராஜாவின் மறைவு குறித்த குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் பேரரசு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் இயக்குனர் இமயம் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு செய்தி தான். சமீபத்தில் தான் இவர் இதய பிரச்சனை காரணமாக சிகிச்சை எடுத்திருந்தார். சிகிச்சைக்கு பிறகு இவர் ஓய்வு நிலையில் இருந்தார்.

பின் திடீரென்று சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு மனோஜ் உயிரிழந்தார். தற்போது இவருக்கு 48 வயது தான் ஆகிறது. இவருடைய மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சென்னையில் நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரர் நகரில் தான் பாரதிராஜாவினுடைய வீடு இருக்கிறது. அங்குதான் மனோஜ் பாரதிராஜாவின் இறுதி சடங்குகள் நடைபெற்றது. அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பருவமே நேரில் சென்று இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.
மனோஜ் பாரதிராஜா மறைவு:
மேலும், மனோஜ் பாரதிராஜாவின் இறப்பிற்கு காரணம், அவர் தன்னுடைய தந்தையைப் போல பெரிய இயக்குனராக முடியவில்லை என்ற மன அழுத்தத்தினால் தான் இறந்தார் என்றெல்லாம் சில பிரபலங்கள் பேசியிருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பேரரசு, எப்பவாவது உங்களிடம் மனோஜ் பாரதிராஜா தான் மன வருத்தத்தில் இருக்கிறேன் என்று சொன்னாரா? சினிமா பிரபலங்களுக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு செல்லும் சில பிரபலங்கள் மைக்கை பார்த்தவுடன் தங்களுக்கு தோன்றிய விஷயங்களை எல்லாம் தெரிந்தது போலவே வாய்க்கு வந்தபடி பேசி விடுகிறார்கள்.

பேரரசு பேட்டி:
அவர்கள் பேசுவது, ஒரு நபரை இழந்த பரிதவிப்பில் இருக்கும் குடும்பத்தினரை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசி இருக்கிறார்கள். பாரதிராஜாவின் மகன் என்ற அழுத்தம் காரணமாக தான் தனக்கு உடல்நிலை ஏற்பட்டும், மனக்கஷ்டம் வந்ததும் என்று எப்பவாவது யாரிடம் ஆவது மனோஜ் கூறியிருப்பாரா? நீங்களே ஏன் இப்படி சொல்கிறீர்கள்? இதெல்லாம் ரொம்ப தவறான செயல்.
சில பிரபலங்களும், youtubeபர்களும் மனோஜ் மரணத்திற்கு காரணம் இதுதான் என்று தங்களுக்கு தோன்றியது எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கண்டித்த பேரரசு:
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நான் அவரோட ஆபீஸ்க்கு அடிக்கடி போயிருக்கிறேன். அவர் எப்போதுமே சிரித்துக் கொண்டு சந்தோஷமாகத்தான் இருப்பார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் தான் யோசிப்பாரே தவிர வேறு எதையுமே இழந்துவிட்டோம் என்று ஒருபோதும் அவர் பேசியதும் கிடையாது, வருத்தப்பட்டதுமே கிடையாது. தேவையில்லாமல் வீண் பழி சுமத்த வேண்டாம். ஆதாரம் இல்லாமல் பேசவும் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=QFKJ7p8xXbQ
மனோஜ் பாரதிராஜா:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் மனோஜ் பாரதிராஜா. இவர் தன் தந்தை இயக்கிய தாஜ்மஹால் படத்தில் தான் நடிகன் ஆகி இருந்தார். இருந்தாலும் அவரால் தன் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். கடந்த ஆண்டு இவர் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் பாரதிராஜாவும் நடித்து இருந்தார். இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று இருந்தது.






