நவரசா அந்தாலஜியில் என் கதையை நீக்கியத்துக்கு இதான் காரணம்னு சொன்னார் மணி சார் – இயக்குனர் பொன்ராம் வேதனை.

0
403
ponram
- Advertisement -

மணிரத்தினத்தால் மன வேதனைக்கு ஆளானேன் என்று இயக்குனர் பொன்ராம் பேட்டி அளித்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா முதல் அலையின் போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக தான் ‘நவரச ஆந்தாலஜி’ என்ற படம் உருவானது. ‘நவரசா’ ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குனர்கள் இயக்கினார்கள். இதில் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், அரவிந்த்சுவாமி, கார்த்திக் சுப்புராஜ், சர்ஜுன், ரதீந்திரன் பிரசாத், வஸந்த் சாய் ஆகியோர் இயக்குநர்களாகப் பணிபுரிந்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், அதர்வா, அஞ்சலி, டெல்லி கணேஷ், அதிதி பாலன், பார்வதி உட்பட பல நட்சத்திரங்கள்நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-
Navarasa | Summer of '92 review: Joyful, simple days of yore

இந்த படத்தில் அனைவரும் சம்பளமின்றி பணிபுரிந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டும் இல்லாமல் மணிரத்தினம் மற்றும் ஜெயந்திரா இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துஇருந்தனர். இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் கிடைத்த பணம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12,000 திரைப்பட தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் மணிரத்தினத்தால் மிகவும் வேதனைக்கு உள்பட்டு உள்ளதாக இயக்குனர் பொன்ராம் கூறி உள்ளார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் உருவாகிறதா புதிய காதல் ஜோடி? நேத்து இவங்க ரெண்டு பேர நோட் பன்னீங்களா.

- Advertisement -

இந்த படத்தில் நகைச்சுவை ரசத்துக்கு பொன்ராம் தான் கதை இயக்கினார். இவர் இயக்கிய கதையில் கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்தார். பின் பொன்ராம் கதையை நீக்கிவிட்டு பிரியதர்ஷன் இயக்கிய படம் இடம் பெற்றது. இதனால் பொன்ராம் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. அது மட்டுமில்லாமல் பொன்ராம் இயக்கிய கதை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. இந்நிலையில் பொன்ராம் அவர்கள் பிரபல நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நவரச படத்தில் ஆடியோவில் பிரச்சினை இருந்ததால் நான் இயக்கிய படத்தை தேர்வு செய்யவில்லை என்று மணிரத்தினம் கூறினார்.

Navarasa: Ponram directs Gautham Karthik in Netflix Anthology! Tamil Movie,  Music Reviews and News

ஆனால், அவர் எனக்கு கொடுத்த விளக்கம் திருப்தி அடையவில்லை. இன்று வரை என்னுடைய படம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணமும் எனக்குத் தெரியாது. அனைவரும் அந்த படத்துக்காக நேர்மையாகவும், உண்மையாகவும் உழைத்தோம். ஆனால், கடைசியில் எங்களுக்கு மன வேதனைதான் மிஞ்சியது என்று கூறியிருந்தார். பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரகனி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள படம் எம்ஜிஆர் மகன். இந்த படம் டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் விமர்சனம் அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-
Advertisement