இதெல்லாம் பண்ண கூடாதுனு செமயா திட்டிட்டேன், இப்போ அவ இதுக்காக தயாராகிட்டு வரா – பிரபு சாலமன் பேட்டி.

0
4359
hazel
- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்யாசமான மற்றும் தரமான படங்களை கொடுத்து தனக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை பதித்தவர் இயக்குனர் பிரபு சாலமன். இவர் இயக்கிய மைனா, கும்கி போன்ற படங்கள் இவருக்கு பல விருதுகளை வாங்கி தந்தது. பிரபு சாலமனை விட சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமடைந்தது அவரது மகள் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலை டிக் டாக் செய்து பிரபலமடைந்தவர் பிரபு சாலமனின் மகள் ஹேசல் ஷைனி.

-விளம்பரம்-

ஹேசல் ஷைனி சமூக ஊடக தளமான டிக் டா க்கில் பிரபலமானவர். இவர் பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் என்பதே பலருக்கும் பின்னர் தான் தெரியவந்தது.டிக் டா க்கில் 14 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டு இருந்தனர். டிக் டோக் மூலம் கிடைத்த பிரபலத்தால் இவருக்கு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிற தளங்களில் அதிக பின்தொடர்பவர்களைப் பெற்றத்தந்தது.

- Advertisement -

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் டிக் டோக் விடீயோக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார். டிக் டாக் தடை செய்யப்பட்ட போது கூட தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து இவரது வீடியோக்கள் வைரலாக பிறவி வருவதால் இவர் விரைவில் சினிமாவில் நடிக்க போகிறார் என்ற செய்திகளும் கிசு கிசுக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபு சாலமன் தனது மகள் குறித்து பேசியுள்ளார்.

வீடியோவில் 5 : 50 நிமிடத்தில் பார்க்கவும்

அதில், என் மகள் கண்டிப்பாக நடிக்க வரமாட்டாள் கல்லூரி படிக்கும்போது ஜாலியாக இதையெல்லாம் செய்வது வழக்கம் தான். இதை எல்லாம் பண்ணக்கூடாது என்று அவளை கடுமையாக திட்டி இருக்கிறேன். இப்போது அவர் யுபிஎஸ்சி பரீட்சைக்காக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏதோ நாம் எப்படி கல்லூரி காலத்தில் இருந்தோம், அவள் இப்போது அதை செய்கிறாள். ஆனால், அவளுக்கு சினிமாவில் வரவேண்டும் என்ற ஒரு சிறிய ஆசை கூட கிடையாது என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement