ஜெயிலரில் அந்த வசனத்தை தனுஷ், ஐஸ்வர்யாவை நினைத்துதான் ரஜினி சொன்னார் – ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குநர் பளீச்

0
2050
Rajini
- Advertisement -

ஜெயிலர் படத்தில் ரஜினி பேசியிருக்கும் டயலாக் குறித்து இயக்குனர் பிரவீன் காந்தி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. ஜெயலலிர் படம் வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் 375 கோடி அதிகமான தொகையை வசூலித்து இருக்கிறது.

படத்தின் வசூல்:

இதுவரை இந்த படம் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் படம் குறித்து இயக்குனர் பிரவீன் காந்தி யூட்யூப் பேட்டி ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில், ஜெயிலர் படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகியிருப்பதற்கு காரணம் அந்த படத்தின் கிளைமாக்ஸில் ரஜினி பேசிய வசனம் தான்.

-விளம்பரம்-

பிரவீன் காந்தி பேட்டி:

அது ‘அப்பாகிட்ட ஏதாவது சொல்ல விரும்புறியாப்பா’. இந்த டயலாக்கை ரஜினி ரெண்டு மூன்று முறை பேசி இருப்பார். அவர் பேசும்போது அந்த வார்த்தையில் ஒரு வலி இருந்தது. அது வெறும் டயலாக் கிடையாது. அது ரஜினி உடைய வாழ்க்கை. அந்த டயலாக் பின்னால் அவர் மனதில் தனுஷை நினைத்திருக்கலாம், இல்லை தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை நினைத்து பேசி இருக்கலாம். காரணம் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு அனைவரும் அறிந்ததே. இதை நினைத்து ரஜினி வருத்தப்பட்டு இருக்கலாம்.

தனுஷ்-ஐஸ்வர்யா குறித்து சொன்னது:

அதை அவர்களிடமும் கேட்கவும் முடியாது. அதனால் தான் ஜெயிலர் படத்தில் அப்பா கிட்ட ஏதாவது சொல்ல விரும்புறியா என்ற டயலாக்கை பலமுறை பேசி இருப்பார். அதோடு அதை சொல்லும் போது டாப் ஆங்கிளில் ரஜினி சிரிப்பதை காட்டுவார்கள். அந்த சிரிப்பு சினிமா கிடையாது. அந்த சிரிப்புக்கு பின்னால் தனுஷ் ஐஸ்வர்யா தான் இருக்கிறார்கள் என்று பேசி இருக்கிறார் .

Advertisement