பெண் விமர்சகருடன் காதல், சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த சர்தார் பட இயக்குனர்.

0
535
mithran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகரும் நடிகர் சங்க தலைவருமான விஷால் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இரும்புத்திரை என்ற படத்தின் மூலம் அறிமுகமாணவர் தான் இயக்குனர் பி எஸ் மித்ரன். இவர் முதல் திரைப்படமான இயக்கிய இரும்புத்திரை படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று அந்த ஆண்டு வெளியான மெகா ஹிட் படங்களில் ஒன்றாக இருந்தது. இப்படம் இணயத்தளத்தில் நடக்கும் நூதனமான மோசடிகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

முதல் படமே வெற்றி என்பதினால் இப்படத்தை தொடர்ந்து விஷாலுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். மேலும் வில்லனாக அர்ஜுன் நடித்திருந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களை வைத்து படமாக்கிய மித்ரன் தொடர்ந்து சுமுக கருத்துக்களை கூறும் படங்களை எடுத்து வருகிறார். இப்படி முதல் படமே ஹிட் அடித்தினால் அடுத்தாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்ற படத்தை இயக்கியிருந்தார். பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் அந்த அளவிற்கு வெற்றியை படக்குழுவிற்கு கொடுக்கவில்லை

- Advertisement -

சர்தார் :

இந்நிலையில் இந்த தோல்வியினால் சிறிது காலம் இடைவெளி விட்ட பி எஸ் மித்ரன் பின்னர் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான சர்தார் படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியிருந்தார் இப்படம் பெரிய அளவில் கிட் கொடுத்து வசூலிலும் பெரிய அளவு சாதனை படித்திருந்தது. இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் தீபாவளி வெளியான இப்படம் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆழமாகவும் அதே போல அழுத்தமாகவும் இந்த கதையில் கூறியிருந்தார் இயக்குனர்.

அடுத்த படம் :

இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் சர்தார் பாகம் 2ல் நடிக்கப் போவதாக கார்த்தி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு கார் ஒன்றையும் பி எஸ் மித்ரனுக்கு பரிசாக கொடுத்திருந்தார் நடிகர் கார்த்திக். மேலும் இந்திய சினிமாவில் பெரிய ஹிட் கொடுத்த கே.ஜி.எஃப் நாயகன் யாஷுடன் நடிக்க இணைந்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், கதையை கேட்ட யாஷ் இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் சமீபத்தில் வெளியானது. ஆனால் இது அதிகாரபூர்வ தகவல் கிடையாது.

-விளம்பரம்-

திருமணம் :

இந்த நிலையில் தான் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தான் நீண்டநாள் காதலித்து வந்த காதலியை தற்போது திருமணம் செய்திருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டுதான் இவருக்கும் பத்திரிக்கையாளரான ஆஷா மீரா ஐயப்பன் என்றவருடன் நிச்சயத்தர்தான் முடிவடைந்த நிலையில் இன்று எளிமையான முறையில் இவர்களது திருமணமானது நடந்து முடிந்திருக்கிறது.

ரசிகர்கள் வாழ்த்து :

இவர்களது திருமணத்தில் மேயாத மான், ஆடை பட இயக்குனர் ரத்னகுமார். அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் போன்ற பால் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை இந்த தம்பதிக்கு தெரிவித்து வருகின்றனர். அதோடு காதலர் தினத்தை முன்னிட்டு காதலித்து வந்த இருவர்கள் திருமணம் செய்து கொண்டதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement