25 வருட நட்பு, ஆனா எனக்கு முரளி துரோகம் செய்துவிட்டார் – பல ஆண்டு கழித்து சொன்ன தேவயானி கணவர் ராஜகுமார்.

0
1051
- Advertisement -

25 வருட நண்பரான முரளியே என்னை ஏமாற்றி விட்டார் என்று மனவேதனையில் இயக்குனர் ராஜகுமாரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் ராஜகுமாரன். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த நீ வருவாய் என என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார். மேலும், இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இதனிடையே இயக்குனர் ராஜகுமாரன் அவர்கள் நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் நடிகை தேவயானியை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே ராஜகுமாரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ராஜகுமாரன் குறித்த தகவல்:

இவர்களுடைய திருமணத்திற்கு தேவயானி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் ஓடிப்போய் திருத்தணியில் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது தேவயானி சின்ன திரையிலும், வெள்ளி திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ராஜகுமாரன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

ராஜகுமாரன் அளித்த பேட்டி:

அதில் அவர் முரளி குறித்து கூறியிருந்தது, நடிகர் முரளியும் நானும் 25 வருட நண்பர்கள். அவர் நடித்த முதல் படத்திலிருந்து நான் அவருடன் பணியாற்றி இருக்கிறேன். அப்போதிலிருந்தே முரளியுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. நல்ல நண்பர்களாக இருந்தோம். அப்படி இருந்தும் அவர் நான் எடுத்த படத்தின் போது ஒழுங்காக சூட்டிங் வரவில்லை. ரொம்ப கஷ்டம் கொடுத்து விட்டார். ரொம்ப தவறாக தொழில் ரீதியாக நடந்து கொண்டார்.

-விளம்பரம்-

முரளி குறித்து சொன்னது:

அதனால்தான் நான் சினிமாவை போடா என்று ஒதுக்கி வைத்து விட்டேன். நல்லா தெரிந்த நெருங்கிய நண்பனே கஷ்டம் கொடுத்தால் மன வேதனை ஏற்படும். நான் 30 வருடமாக சினிமா உலகில் இருக்கிறேன். இதுவரை நான் 10 லட்சம் கூட சம்பாதித்து இருக்க மாட்டேன். பணத்திற்காக நான் சினிமாவில்இருக்கவில்லை. அதன் மீது உள்ள காதலினால் தான் நான் சினிமாவிற்கு வந்தேன். அதேபோல் விஜயகுமார் சாரூம் என்னிடம் அருண் விஜய் பற்றி கேட்டிருந்தார்.

சினிமா குறித்து சொன்னது:

படமெடுக்க சொன்னார். நான் முடியாது, இப்ப நான் படம் பண்ணுவதில்லை என்று சொல்லிவிட்டேன். அது மட்டும் இல்லாமல் நான் சில புத்தகங்களை படித்திருந்ததால் எனக்கு ஜாதகம் பற்றி ஒரு அளவு தெரியும். அப்போது அவரிடம் 20 வருடங்களுக்கு பிறகு தான் உங்களுடைய மகனின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அதேபோல் தற்போது அவர் வில்லனாகவோ,ஹீரோவாகவோ மக்கள் மத்தியில் பதிந்திருக்கிறார் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை ராஜகுமாரன் பேசியிருக்கிறார். மேலும், இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் முரளி நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் காதலுடன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement