விக்ரம் எல்லா சிறந்த நடிகர் இல்ல, சர்ச்சையை கிளப்பிய தேவையாணி கணவர் (விக்ரம வச்சி இவர் எடுத்த படம் என்ன தெரியுமா, செம Flop அது)

0
460
vikram
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் தன்னுடைய கடுமையான உழைப்பினால் தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர். அதுமட்டும் இல்லாமல் வித்யாசமான கதைக்காக தன் உடலையும் வருத்தி எந்த நிலைக்கும் செல்பவர் விக்ரம். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் மகான். இந்த படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடித்து உள்ளார்கள். அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக இணைந்து நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்கினார். இவர்களுடன் பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. அதேபோல் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் விக்ரம் நடித்து முடித்து விட்டார்.

- Advertisement -

விக்ரம் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் அளித்த பேட்டி:

இந்த படங்கள் எல்லாம் கூடிய விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் குறித்து தான. அதில் ராஜகுமாரன் பேசி இருப்பது, விண்ணுக்கும் மண்ணுக்கும் படப்பிடிப்பில் எனக்கும் விக்ரமுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. எனக்கும்,சரத், கம்பெனிக்கும் தான் ப்ரச்சனை.

விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் பற்றி விக்ரம் சொன்னது:

ஆனால், விக்ரம் நடிக்க அதிக நாட்கள் கொடுத்ததினால் அவர் சம்பளம் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்தார். ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து கொடுக்கவில்லை. மத்தபடி எனக்கும் விக்ரமுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இந்த படத்தைப்பற்றி விக்ரம் ‘i hate this flim’ என்று ஏதோ ஒரு இண்டர்வியூல் சொல்லியிருந்தார். அது ஏன் என்று தெரியவில்லை. இன்னைக்கு வரைக்கும் அனைவரும் ஒரு உண்மையை உணர வேண்டும்.

-விளம்பரம்-

விக்ரம் வாழ்க்கை மாற்றிய படம்:

விஜய் நூறு படம் நடித்து வந்தாலும் பூவே உனக்காக படம் தான் அவருடைய சினிமா வாழ்க்கையை மாற்றிவிட்டது. அந்த பிளாட்பார்ம் தான் அவருக்கு கைகொடுத்தது. அதேபோல் தான் விக்ரமுக்கு சேது படம் திருப்பு முனையாக அமைந்தாலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தான் அமைந்தது. விக்ரமை ஒரு நடிகனாக சேது காண்பித்து இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் விக்ரமை கொண்டு போய் சேர்த்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தான்.

வீடியோவில் 15 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும்:

அது தான் குடும்ப படம். சேது படத்தை ரசிகர்கள் பத்திரிக்கை நிறுவனங்கள் பார்ப்பார்களே தவிர விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் குடும்பத்தோடு பார்த்த படம். இன்னும் கே டிவியில் சூரியவம்சம் படத்துக்கு பின் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் டாப்பில் உள்ளது. என்னை பொறுத்தவரை நடிப்பதென்றால் கையை உடைத்து, காலை உடைத்து, கண்ணை மாற்றி பார்த்து நடிப்பது நடிப்பு கிடையாது. இருக்கிற எதார்த்தத்தை க்ளோசப்பில் நடிப்பது. அவன் தான் நடிகன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் விக்ரம் பற்றி பேசி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement