ரஞ்சித்தின் அடுத்த படம் எது, எங்கு தெரியுமா.? போட்டி போடும் நிறுவனங்கள்! அடுத்த லெவல்!

0
1882
pa-ranjith

சூப்பர் ஸ்டார் நடித்து சமீபத்தில் வெளியான ‘காலா’ படத்திற்கு பின்னர் அணைத்து சினிமா ரசிகர்களின் பார்வையும் இயக்குனர் பா. ரஞ்சித் மீது தான் திரும்பியுள்ளது. ‘காலா’ படம் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்ற போதும், இந்த படம் 3 நாட்களில் 100 கோடி ரூபாயையும் வசூல் செய்தது.

ranjith

இயக்குனர் ரஞ்சித் சூப்பர் ஸ்டாரை வைத்து தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கிவிட்டார். அதுவும் சமீபத்தில் வெளியான ‘காலா’ படம் ரஜினி படமாக கருத்தப்படமால் முழுக்க முழுக்க ரஞ்சித்தின் படமாகவே கருதப்படுகிறது. இயக்குனர் ரஞ்சித்திற்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த படம் பாலிவுட் சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித்தை பல பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் வரவேற்க தயாராக இருக்கிறதாம். இதனால் ரஞ்சித்தை தங்களது நிறுவனித்தில் கமிட் செய்து விடலாம் என்று பல இந்தி தயாரிப்பு நிறுவனங்களும் ரஞ்சித்திற்கு வலை வீசி வருகின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் தெரிவித்த இயக்குனர் ரஞ்சித் ‘நான் இன்னும் இந்தி படம் இயக்குவது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இந்தியில் படம் இயக்குவது குறித்து என்னுடன் பேசி வருகிறார்கள். விரைவில் அதை பற்றிய தகவல்களை அறிவிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். எனவே, இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படம் இந்தியில் வெளியானாலும் ஆச்சர்யத்திற்கு இல்லை.