தளபதி விஜய் மற்றும் அவரது கட்சி குறித்து பிரபல இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசியிருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் கொடிக்கட்டிப் பறக்கும் நடிகர்களில் தளபதி விஜயும் முக்கியமானவர். இவர் ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் இவரது படங்கள் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும், பின்னர் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவில் தன்னை தளபதி விஜய் நிலைநிறுத்திக் கொண்டார். இன்று தமிழ் சினிமா உலகில் இவரை போல் நடனம் ஆடவும், நடிக்கவும் இவருக்கு இணையாக யாரும் இல்லை என்கிற அளவிற்கு இவர் உருவாக்கியிருக்கிறார்.
கடைசியாக விஜய் நடிப்பில் ‘கோட்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், நல்ல வசூல் சாதனை செய்திருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர் தனது கடைசி படமான ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
விஜய் அரசியல்:
இதற்கிடையே கடந்த 2024 பிப்ரவரி மாதம், தளபதி விஜய் தனது ரசிகர் மன்றத்தினை, அரசியல் கட்சியாக மாற்றி அறிவித்தார். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கட்சி தமிழ்நாடு அரசியல் களத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது விஜய் படப்பிடிப்பு, அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், தனது 69 ஆவது படத்திற்குப் பின்னர், சினிமாவில் இருந்து முற்றிலும் தளபதி விஜய் விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதோட வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாகவும் விஜய் அறிவித்திருக்கிறார்.
தவெக முதல் மாநாடு :
இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் தன் கட்சிக் கொடியை விஜய் அறிமுகப்படுத்தியிருந்தார். பின் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விஜய் பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். மேலும் மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய்மறக்க வைத்தது. சில தினங்களுக்கு முன்னர் கூட, பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக போராடும் மக்களைச் சந்தித்து விஜய் பேசியிருந்தார்.
ஆர்.வி. உதயகுமார்:
இந்நிலையில் பிரபல இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், சமீபத்தில் ‘மனிதன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினரைப் வாழ்த்தி பேசியிருந்தார். அப்போது தளபதி விஜய் குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்தும் ஆர்.வி. உதயகுமார் தனது கருத்துக்களை பகிர்ந்து இருந்தார். அப்போது, விஜய் அரசியலுக்கு வர அவருக்கு நம்பிக்கை கொடுத்ததே, ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான திருப்பாச்சி மற்றும் சிவகாசி படங்கள் தான். இந்த இரண்டு படங்கள் இல்லை என்றால் விஜய் இன்றைக்கு கட்சி ஆரம்பித்து இருக்க முடியுமா? என்று பேசியிருக்கிறார்.
இந்த இரண்டு படங்கள்தான் :
மேலும் அவர், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த படங்கள் தான் விஜய்க்கு இன்றைக்கு வரை பேசப்படும் படங்களாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். தற்போது இவரது பேச்சு தான் பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது. இவர் குறிப்பிட்ட இந்த இரண்டு படங்களும் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் உருவான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் அரசியல் வருகை குறித்து தற்போது இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசி இருக்கும் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.