பவர் ஆப் சைலன்ஸ், Writing-ல் உட்கார்ந்த அஜித் – அசல் பட தோல்விக்கு அஜித் தான் காரணமா? உண்மையை போட்டுடைத்த சரண்.

0
141
- Advertisement -

அசல் படத்தின் தோல்விக்கு காரணம் அஜித் தான் இயக்குனர் சரண் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இருந்தாலும் சில படங்கள் தோல்வி பெற்று எதிர்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அந்த வகையில் அஜித் நடிப்பில் சரண் இயக்கத்தில் வெளிவந்து தோல்வியடைந்த படம் அசல்.

-விளம்பரம்-

இதற்கு முன்னாடி இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் போன்ற படங்களெல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. ஆனால், அசல் படம் மட்டும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இந்தப் படத்தில் பிரபு, சமீரா ரெட்டி, பாவனா, சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் அசல் படம் தோல்விக்கான காரணம் குறித்து இயக்குனர் சரண் கொடுத்த பேட்டியில், அசல் படத்தை இப்போ போய் பாருங்கள்.

- Advertisement -

சரண் அளித்த பேட்டி:

என்னை அஜித்தை எல்லாம் விட்டுவிட்டு எங்க ரெண்டு பேரோட காம்போவ மறந்து, அட்டகாசம் படத்திற்கு பிறகு வந்த படம் என்பதை விட்டு இந்த படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பார்த்தால் ஒரு கட்டுக்கோப்பான ஒரு நுணுக்கமான படமாக இருக்கும். ஆனால், அப்ப ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு அந்த படம் கை கொடுக்கவில்லை. காரணம், அந்த சமயத்தில் அஜித் நிறைய பஞ்ச் பேசி சோர்ந்து போய் இருந்தார்.

அசல் பட தோல்விக்கு காரணம்:

அதனால் இந்த படத்தில் பஞ்சல்லாம் வேணாம் என்று முதலில் அஜித் சொல்லிவிட்டார். டைட்டிலுக்கு கீழ கூட பவர் ஆப் சைலன்ஸ் என்று போட்டு விடுங்கள் என்று சொன்னார். அவர் படம் முழுக்க பன்ச் பேசாமல், அப்படியே பேச வேண்டும் என்றால் ஒரு லைன் மட்டும் பேசுவார். இது எப்படி இருந்தது என்றால் கையை கட்டி நீச்சல் அடிக்கும் மாதிரி இருந்தது. பெரிதாக வசனம் எதுவும் இல்லாமல், பஞ்சு இல்லாமல், ஒரு ஆக்ரோஷமாக அவரைக் காட்ட முடியாமல் இந்தப் படத்தில் இருந்தது.

-விளம்பரம்-

அஜித் குறித்து சொன்னது:

ஹாலிவுட் படத்திற்கு நிகராக தான் இந்த படம் எடுத்தது. ஆனால், இதெல்லாம் இல்லாததால் தான் மக்களுக்கு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. டைட்டிலுக்கு கீழே அவர் போட சொன்னதற்கு காரணமும் படம் பிடிக்கவில்லை என்றால் திட்டுபவர்கள் என்னை திட்டட்டும் என்று சொல்லிவிட்டார். இயக்குனரை யாரும் எதுவும் குறை சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் அவர் அப்படி சொன்னார். அவரும் இந்த படத்திற்காக முழு எபெர்ட் போட்டு தான் கொடுத்தார். இருந்தும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

அஜித் படம்:

கடைசியாக அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். தற்போது இவர் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இதை அடுத்து குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.

Advertisement