கையில் வெட்டுப்பட்டார்,காதலில் கட்டுப்பட்டார் – அமர்க்களம் படப்பிடிப்பில் ஷாலினி கலந்துகொண்ட முதல் நாள் புகைபடத்தை பகிர்ந்த சரண்.

0
454
- Advertisement -

தமிழ் சினிமா பிரபலங்களில் எவ்வோளவோ புதிது புதிதாக தம்பதியர்கள் வந்தாலும் முதலில் அனைவருக்கும் மனதில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. கடைசியாக இவர் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர். 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த படம் அமர்க்களம். இந்த படத்தில் தான் ஷாலினியும் அஜித்தும் இணைந்து ஜோடியாக நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பல வருடங்களாகவே தல அஜித் அவர்கள் ஊடகங்களில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இருந்தாலும் இவரின் புகழ் சமூக வலைத்தளங்களில் என்றும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அமர்க்களம் படத்தின் போது ஷாலினி படப்பிடிப்பில் கலந்துகொண்ட முதல் நாள் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் இயக்குனர் சரண்.

- Advertisement -

அமர்க்களம்- ஷாலினி அவர்களுடன் அவரது முதல் நாள் படப்பிடிப்பில் முதல் ஷாட் பற்றி விவரித்த போது, இதிலிருந்து மூன்றாவது நாள் ஏ.கே அவர்களுடன் படப்பிடிப்பில் இணைந்தார்,கையில் வெட்டுப்பட்டார்,காதலில் கட்டுப்பட்டார் என்று பதிவிட்டுள்ளார். இதுஒருபுறம் இருக்க அஜித்-ஷாலினி 1999 ஆம் ஆண்டு இவர்களின் காதல் குறித்து சுவாரசியமாக பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்கள். அப்போது கொடுத்த பேட்டி தற்போது வெளியாகி உள்ளது.

அமர்க்களம் படத்தின் சூட்டிங் நேரத்தில் அஜித் கத்தியை வீச அந்த கத்தி ஷாலினியின் கையில் கட் பண்ணும் அது தான் காட்சி. ஆனால், நிஜமாகவே ஷாலினியின் கையை கத்தி கிழித்து விட்டது. இது யாரும் எதிர்பாராத திருப்பம். அஜித் அவர்கள் ஷாலினிக்கு ஏற்பட்டதை பார்த்து பயந்து விட்டார். பின் தாம்தூம் என்று குதித்து ஒரே ஆர்ப்பாட்டம் செய்து சில நிமிடங்களிலேயே படப்பிடிப்பு தளத்திற்கு ஆஸ்பிட்டலை கொண்டு வந்தார்.

-விளம்பரம்-

முதல் சந்திப்பிலேயே ரத்த காயம் :

ஆனால், ஷாலினி நோ ப்ராப்ளம் எனக்கு ஒன்னும் இல்லை என்று சொல்லி இருந்தார். இப்படி இவர்கள் 2 பேரும் சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே இந்த மாதிரி ரத்த காயம் ஏற்பட்டது. அது பயங்கர கஷ்டமாக இருந்தது. இதுவரை நான் சந்தித்த பெண்களிலேயே என் மனதை கவர்ந்தவர் ஷாலினி. பின் ஷாலினிடம் போய் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னேன். என்ன பதில் வருமோ? என்ற பதட்டம் ஒரு பக்கம் என் மனதில் இருந்தது.

அப்பாவிடம் பேச சொன்ன ஷாலினி :

பேசுவதை நிறுத்திவிட்டு அவருடைய பதிலுக்காக காத்திருந்தேன் என்று அஜித் கூறி இருந்தார். அப்போது ஷாலினி அவர்கள் கூறியது, அஜித் என்னிடம் காதல் சொல்லும் போது என் மனதுக்குள் சம்மதம் தான். ஆனால், நான் அப்பா பொண்ணு என்பதால் எனக்கு ஓகே., அப்பாவிடம் போய் பேசுங்கள் என்று சொன்னேன். அஜித்தும் அப்பாவிடம் பேச போனார். ஆனால், நான் அஜித் பேசுவதற்கு முன்பே அப்பாவிடம் பேசி விட்டேன். அப்பாவும் சரி சம்மதம் என்று சொல்லி விட்டார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement