சசி குமாரின் சொந்த ஊர், உறவினர்கள், சொந்த வீட்டை பார்த்துளீர்களா ? பழைய வீட்டை இடித்துவிட்டு பிரம்மாண்ட வீட்டை கட்டி வரும் சசி.

0
1208
sasi
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வருபவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் இயக்குனராகி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சசிகுமார். மேலும், இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சுப்ரமணியபுரம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்து இருந்தது. இந்த படத்தின் மூலம் தான் சசிகுமார் இயக்குனராகவும் நடிகராகவும் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு போன்ற பலர் நடித்திருந்தார்கள். அதோடு இந்த திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்து இருந்தது. அதன் பின்னர் சசிகுமார் ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதோடு இவர் இயக்குவதை விட்டு தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். ‘நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா, கொடி வீரன், அசுரவதம், பேட்ட,

- Advertisement -

சசிகுமார் நடித்த படங்கள்:

கென்னடி, நாடோடிகள் 2’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து இருக்கிறார் சசிக்குமார். இதில் ‘பேட்ட’ திரைப்படம் சசிக்குமாருக்கு ரொம்பவும் ஸ்பெஷல் என்பது குறிப்பிட்டத்தக்கது. சமீபத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. இந்த படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது மட்டுமே வச்ச சிங்கம்டா, .பரமகுரு போன்ற பல படங்களில் சசிகுமார் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் 12 ஆண்டுகளுக்கு பிறகு சசிகுமார் இயக்குனராக ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

சசிகுமார் இயக்கும் படம்:

குற்றப்பரம்பரை என்ற நாவலை தான் சசிகுமார் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய நாவல் தான் குற்றப்பரம்பரை. இந்த நாவல் மிகவும் பிரபலமானது. மேலும், இந்த தொடரின் கதையை வேல ராமமூர்த்தி எழுது இருப்பதாகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் மகன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

சசிகுமார் பூர்வீக ஊர்:

இந்தநிலையில் சசிகுமாரின் சொந்த ஊர், பூர்வீக வீடு குறித்த வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், மதுரை மாவட்டத்தில் இருக்கும் தாமரைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் நடிகர் சசிகுமார். சசிகுமாரின் தந்தை மகாலிங்கம். விவசாயம் குடும்பத்தை சேர்ந்தவர். சசிகுமாருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். சசிகுமாரின் தம்பி ஆனந்தகுமார் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார்.

சசிகுமார் உறவினர் அளித்த பேட்டி:

சசிகுமாருக்கு ஓட்டு வீடு, மாடி வீடு என்று 2 பூர்வீக வீடு இருக்கிறது. தற்போது அந்த வீட்டை இடித்து விட்டு பெரிய வீடு ஒன்று கட்டி கொண்டு வருகிறார். பின் சசி சசிகுமாரின் உறவினரும் பேட்டி எடுக்கப்பட்ட போது அதில் அவர்கள், சசிகுமார் என் அக்கா மகன் தான். சிறு வயதிலிருந்தே நடிகனாக வேண்டும் என்ற வெறியோடு வைராக்கியத்தில் இருந்தவர். நல்ல குணமுடையவர், பாசம் உடையவர். ஊருக்கு ஏதாவது உதவி என்று கேட்டால் செய்து தருகிறார் என்று கூறியிருந்தார்.

Advertisement