மீண்டும் சரித்திர கதைக்கு ஓகே சொன்ன விஜய். விரைவில் இணைவோம் என்று நம்பிக்கை தெரிவித்த இயக்குனர்.

0
10507
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தற்போது நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

‘மாஸ்டர்’ படத்துக்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தினை கலாநிதி மாறன் தனது ‘சன் பிக்சர்ஸ்’ எனும் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப் போகிறாராம். ஏற்கனவே, தொடங்கப்பட்ட இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது என்ற செய்திகளும் வெளியானது.

இதையும் பாருங்க : முன்னாள் காதலிகளை தோழிகளாக வைத்திருபவர்கள் இதுக்காக அலைபவர்கள் – திரிஷா போட்ட பதிவு.

- Advertisement -

இந்த நிலையில் விஜய்யை வைத்து வரலாற்று படத்தை இயக்க போவதாக கூறியுள்ளார் நடிகரும் இயக்குனருமான சசி குமார். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்தார். அதை தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், கிடாரி, நாடோடிகள் 2 என்று ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சசிகுமார் பேசுகையில், தனக்கு வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இல்லை ஆனால், அப்படி ஒரு படத்தை எடுக்க ஆசை என்று கூறியுள்ளார். மேலும், வரலாற்று கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன். அந்த கதையை விஜய்யை வைத்து படமாக்கலாம் என்று அவரிடம் சொன்னேன். கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. நடிக்க சம்மதித்தார். ஆனால் வேறு சில காரணங்களால் படப்பிடிப்பு நடக்கவில்லை. படத்துக்கான பட்ஜெட் அதிகமாக இருந்தது. வருங்காலத்தில் கண்டிப்பாக அந்த படத்தை விஜய்யும் நானும் சேர்ந்து எடுப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement