தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நந்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இரா. சரவணன் இயக்கி இருந்தார்.
டூரிஸ்ட் பேமிலி:
இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பாராட்டி இருந்தார்கள். இதைத்தொடர்ந்து தற்போது சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படக்குழு பேட்டி:
இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தில் நிறைய விஜய் பற்றிய குறிப்புகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் படக்குழுவினரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு இயக்குனர் அபிஷன், சீரியஸான படங்கள் எல்லாம் வந்துவிட்டது. ஒரு லைட் ஹார்ட்டான படம் பண்ணனும் என்று தான் இதை எடுத்தோம். இந்த படம் பார்த்திருந்தாலே உங்களுக்கே தெரியும். இந்த படத்துக்கும் கிளைமாக்ஸுக்கும் விஜய் சாரின் விஷயம் தேவைப்பட்டது.

விஜய் வைத்த காரணம்:
படத்தில் நடித்த சின்ன பையன் விஜய் சார் ரசிகனாக நடித்திருப்பான் ஒரு குடும்பப்படம் பண்ணனும். குறிப்பா குடும்பத்தில் இருக்கும் பாசம், நேசம் இதையெல்லாம் வைத்து பண்ணனும் என்பது தான் எங்களுடைய நோக்கம் என்று கூறியிருந்தார். உடனே நடிகர் சசிகுமார், ஒரு சோகத்தை மறைத்து ஹியூமராக சொல்லும் போது அது எல்லோரிடமும் போய் சேரும். சோகமாக சொல்ல முடியாது. இந்த கதையை அப்படித்தான் எடுத்திருக்கிறோம். வாழ்க்கை ரொம்ப அழகானது என்று சொல்லுவோம். அந்த மாதிரி விஷயமாக தான் பார்க்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

கதைக்களம்:
படத்தில் சசிகுமார் தன்னுடைய மனைவி சிம்ரன் மற்றும் இரண்டுமகன்களுடன் இலங்கையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார். இதனால் இவர் இலங்கையில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக இந்தியா வருகிறார். ராமேஸ்வரம் வந்த இவரை சிம்ரன் அண்ணன் யோகி பாபு தான் சென்னைக்கு அழைத்து வந்து கேசவ நகரில் குடி வைக்கிறார். இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்ற அடையாளத்தையே மறைத்து சசிகுமார் குடும்பம் வாழ்கிறார்கள். இன்னொரு பக்கம் ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் போலீஸ் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் சசிகுமார் குடும்பம் சிக்குகிறது. இந்த சவால்களில் இருந்து சசிகுமார் தன்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்றினார்? அதனால் என்னென்ன பிரச்சனை வருகிறது? இதையெல்லாம் அந்த குடும்பம் சமாளித்து வந்ததா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.






