கால் ஷீட் வேணும்னா கேளுங்க, எஸ் கே கொடுப்பார். எஸ் கேவை தோனியுடன் ஒப்பிட்ட இயக்குனர். கடுப்பான ரசிகர்.

0
913
dhoni
- Advertisement -

தோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல் என்ற பட்டப் பெயருடன் திகழ்ந்து வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்தியவர்.

-விளம்பரம்-

தோனியின் ஓய்வு அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் தோனியின் ஓய்வுக்கு பிறகு ட்வீட் ஒன்றைச் செய்திருந்தார். அதில் எங்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தி மகிழ்வித்ததற்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்ற. நீங்கள் எப்போதும் ஒரு அற்புதமான தலைவர். கண்டிப்பாக எங்களை ஆச்சரியப்படுத்த பல்வேறு உத்திகளை வைத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

- Advertisement -

உங்களின் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு காத்துக்கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். சிவகார்த்திகேயனின் இந்த ட்வீட்டை பார்த்த இயக்குனர் சீனு ராமசாமி, தோனியை போல நீங்களும் சின்னத்திரையில் இருந்து பயணத்தைத் தொடர்ந்து எங்களை உற்சாகப்படுத்தி கொண்டிருப்பதோடு புதிய நடிகர்களுக்கு வாய்ப்பையும் உங்கள் நண்பர்களுக்கு ஒரு தளத்தையும் தோனியை போல அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் இருவரும் ஒன்றுதான் என்று பதிவிட்டிருந்தார்.

சீனு ராமசாமியின் இந்த பதிவை கண்ட ரசிகர் ஒருவர் எந்த ஒரு நடிகரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள்தான் ரசிகர்கள் மத்தியில் சண்டையை உருவாக்க காரணமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எஸ் கே உடன் படம் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் நேரடியாக அவரிடம் கால்ஷீட் கேளுங்கள், உங்களுக்கு அவர் பணத்தை கொடுப்பார் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

ரசிகரின் இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த சீனுராமசாமி எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் சொந்த முயற்சியில் முன்னேறும் அனைவருமே தோனி தான். எனவே, தோனி அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான். உங்களை யாராவது நீங்கள் உங்கள் தந்தையைப் போல வாழ்கிறீர்கள் என்று சொன்னாள், அதற்கு என்ன பெயர். இது கால்ஷீட்டுக்காக கிடையாது ஒருவேளை இது மார்க்சீட்டாக இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்

Advertisement