தன்னுடைய குடும்பம் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து இயக்குனர் செல்வராகவன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார்.

இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்ஜிகே போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும், இவர் இயக்குவதும் மட்டும் இல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு இருந்தது.
செல்வராகவன் குறித்த தகவல்:
இதனை தொடர்ந்து செல்வராகவன் நடித்த சாணி காகிதம் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . அதன் பின் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருகிறேன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருந்தார்.
செல்வராகவன் திரைப்பயணம்:
இதை தொடர்ந்து இவர் படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் 7ஜி ரெயின்போ காலனி படத்தினுடைய இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் இயங்கி கொண்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஆயிரத்தில் ஒருவர் படத்தினுடைய இரண்டாம் பாகத்திற்கான வேலையிலுமே செல்வராகவன் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் செல்வராகவன், என்னுடைய சின்ன வயதில் எங்கள் வீட்டில் ரொம்பவே கஷ்டம்.

செல்வராகவன் பேட்டி:
சொந்த ஊரிலிருந்து பிழைப்புக்காக தான் நாங்கள் குடும்பத்தோடு சென்னை வந்தோம். அப்போது நானும் என்னுடைய சகோதரியும் தான் இருந்தோம். சென்னை வந்த உடனே வேலை கிடைக்கவில்லை. அதனால் வீட்டில் அவ்வளவு வறுமை,கஷ்டம். என்னுடைய அம்மா பக்கத்து வீட்டில், என்னுடைய கணவர் வேலைக்கு போகிறார். அவரின் துணிக்கு கஞ்சி தேவைப்படுகிறது என்று சொல்லி அதை வாங்கி வந்து எங்களுக்கு சாப்பாடாக போடுவார். நான் பள்ளிக்கு சென்று விடுவேன். என்னுடைய அப்பா ஒவ்வொரு நாளுமே அவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தார்.
https://www.youtube.com/watch?v=L9NP7ORoRvs
சிறுவயது கஷ்டம்:
உண்மையிலேயே அவர் ரொம்பவே பாவம். இதற்கிடையில் எங்கள் வீட்டில் நான்கு குழந்தைகள் வந்துவிட்டது. ஐந்து வயிறுக்கு சாப்பாடு போட வேண்டும். அதில் மூன்று பேர் பள்ளிக்கு செல்கிறார்கள். கையில் இருக்கும் 500 ரூபாய்க்கு உள்ளே வீட்டின் தேவைகள் அனைத்தையுமே செய்து கொள்ள வேண்டும். தீபாவளி, பொங்கல் என்றால் எப்படியாவது எங்களுக்கு புது துணி வாங்கி கொடுத்து விடுவார், இதில் கஷ்டத்தையே பார்க்காமல் வளர்ந்தவர் தனுஷ் மட்டும் தான். அவர் வரும்போது குடும்பம் ஓரளவுக்கு நல்ல நிலைமைக்கு இருந்தது. என்னுடைய அப்பா இயக்குனராக மாறிவிட்டார். அதன் பின்னர்தான் என்னுடைய குடும்பம் நிம்மதியாக மூச்சுவிட்டது என்று கூறி இருக்கிறார்.






