சிறு வயதிலேயே பாதித்த அறிய வகை நோய் – செல்வராகவனுக்கு செயற்கை கண் பொருத்தப்பட்ட காரணம் பற்றி தெரியுமா ?

0
664
selvaargavan
- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட், சாணி காகிதம் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இவருடைய நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்தார்கள்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து தற்போது செல்வராகவன் படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அதில் அவர்,

- Advertisement -

அன்புள்ள செல்வா (வயது 14),

உன் உருவத்தை வைத்து இவ்வுலகம் உன்னை பார்த்து சிரிக்கிறது. ஏனென்றால், நீ ஒரு மாற்று திறனாளி. உனக்கு ஒரு கண்ணில் பார்வை குறைபாடு உள்ளது. நீ எங்கே சென்றாலும் மக்கள் உன்னை பார்த்து சிரிக்கிறார்கள் அல்லது கேலி செய்கிறார்கள். அதை நினைத்து ஒவ்வொரு இரவும் நீ அழுகிறாய். சில நேரங்களில் ‘ஏன் என் கண்ணை பறித்தாய்’ என்று கடவுளிடம் கேட்கிறாய். ஆனால், கவலைப்படாதே செல்வா. இன்னும் சரியாக பத்தே வருடங்களில் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படத்தை எழுதப் போகிறாய். அது உன் வாழ்வையே மாற்றப் போகிறது. இதே உலகம் அப்போதும் உன்னை பார்க்கும்.

செல்வராகவன் பதிவிட்ட பதிவு:

ஆனால் கேலி செய்யும் நோக்கத்தோடு அல்ல. மாறாக மரியாதையுடனும், நம்பிக்கையுடனும். இன்னும் 10 வருடங்களில் சிறந்த படங்களை எடுத்து தமிழ் சினிமா வரலாற்றில் நீ இடம்பிடிப்பாய். மக்கள் உன்னை ‘ஜீனியஸ்’ என்று அழைப்பார்கள். உன்னுடைய சிறுவயதில் உனக்கு ஒரு துர்சம்பவமாக அமைந்த அந்த கண்ணை அப்போது மக்கள் பார்க்கமாட்டார்கள். தனது படங்களின் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய ஒரு மனிதனை அவர்கள் பார்ப்பார்கள். எனவே தைரியமாக இரு. கடவுள் உன்னிடமிருந்து மதிப்புமிக்க ஒன்றை எடுத்துக் கொண்டால் அதை விட அபரிமிதமான ஒன்றை உனக்கு திருப்பித் தருவார்.

-விளம்பரம்-

கண் புற்றுநோய் குறித்த தகவல்:

எனவே உற்சாகமாக இரு. புகைப்படங்களில் சிரி. (என்னால் நீ சிரிக்கும் ஒரு புகைப்படத்தை கூட கண்டுபிடிக்க முடியவில்லை) ஏனெனில் வரும் ஆண்டுகளில் உன்னுடைய பல புகைப்படங்கள் எடுக்கப்பட போகின்றன. இயக்குநர் செல்வராகவன் (வயது 45). என்று செல்வராகவன் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி செல்வராகவன் பதிவிட்ட உருக்கமான பதிவு இது. இயக்குனர் செல்வராகவனுக்கு ஒரு கண்ணில் செயற்கை கண் பொறுத்துப்பட்டு இருக்கிறது என்பது பலர் அறிந்த விஷயம் தான். ஆனால், அவரது கண்களுக்கு என்ன ஆனது ? எதனால் சிறு வயதிலேயே செல்வராவான் கண்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டது என்பது பலர் அறிந்திராத உண்மை.

கண் புற்றுநோய்க்கான காரணங்கள்:

அதாவது, கண்களின் பின்புறம் உள்ள விழித்திரையில் ரெடினோபிளாஸ்டோமா எனும் விழித்திரை புற்றுநோய் ஏற்படும். ஒரு கண்ணிலோ இரண்டு கண்களிலோ ஏற்படும். இது மிக அரிதான நோய். குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அதிகளவில் தாக்கும் நோய். ஆரம்ப நிலையில் இந்த நோய் இருந்தால், குணப்படுத்தலாம். ஆனால் பிற புற்றுநோய்களைப் போல நாளடைவில் உடலெங்கும் பரவும் அபாயம் உண்டு. விழித்திரை புற்றுநோய் தோன்றுவதற்கான காரணங்கள் இன்னும் சரியாகக் கண்டறியப்படவில்லை. கருவில் குழந்தை வளரும்போது ஏதேனும் குறைபாடு ஏற்பட்டிருந்தால் விழித்திரையில் புற்றுநோய் ஏற்படும்.

நோயின் அறிகுறிகள்:

பெரும்பாலான குழந்தைகளுக்கு விழித்திரை செல்கள் வேகமாக வளர்ந்து திடீரென வளர்ச்சி நின்றுவிடும்.
சில குழந்தைகளுக்கு செல்களின் வளர்ச்சி நிற்காது. இந்த இயல்பற்ற வளர்ச்சியால் புற்றுநோய் ஏற்படும். சில குழந்தைகளுக்கு மரபணு மாற்றங்கள் அல்லது பரம்பரை சிக்கல்கள் காரணமாகவும் விழித்திரையில் புற்றுநோய் ஏற்படலாம். இந்த நோய்க்கு கண் பாவையின் நடுவில் வெள்ளையாக வட்டம் தோன்றுதல், மாறுகண், கண்ணின் வெள்ளைப் பகுதி நிறம் மாறுதல், கண்கள் சிவப்படைதல், வீக்கம் போன்ற பல அறிகுறிகள் இருக்கிறது.

Advertisement