இரு வேளை உண்டால் அரிது..!நீ எல்லாம் என்ன கிழிக்கபோற என்று கேட்டார்கள்.!செல்வராகவன் உருக்கம்.!

0
464
Selvaragavan

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் இயக்குனர் செல்வராகவனும் ஒரு நிலையான இடத்தை பிடித்திருப்பவர். தமிழில் இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்கள் இரண்டாம் பாகம் வர வேண்டும் என்று ரசிங்கர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் செல்வராகவன் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்பது தெரியும். ஆனால், செல்வராகவன் பலரும் நினைப்பது போல ஒரு வசதியான வாழ்க்கையை வாழ்ந்துவிடவில்லை என்று செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மனமுறுகியுள்ளார்.

- Advertisement -

இயக்குனர் செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். நல்ல நடிப்புத் திறமை இருந்து குடிப்பழக்கம் என்ற ஒரு கெட்ட ஒரு போதைப் பழக்கத்தின் காரணமாக தனது திருமண வாழ்க்கையையும் தொலைத்து விட்டார் சோனியா அகர்வால். இயக்குனர் செல்வராகவனுடன் செய்த திருமணம் 2010 வரை தான் நீடித்தது. பின்னர் விவாகரத்து பெற்று சென்றுவிட்டார் செல்வராகவன்.

விவாகரத்துக்கு பின்னர் ஒரு சில ஆண்டுகள் படம் ஏதும் இயக்காமல் இருந்த செல்வராகவன் பின்னர் எடுத்த எந்த படமும் கை கொடுக்கவில்லை. தற்போது சூர்யாவை வைத்து என் ஜி கே படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், கொடுரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான்.இரு வேளை உண்டால் அரிது.அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயின் சமூகம் கேலி செய்யும்.நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என.எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர்.அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்

-விளம்பரம்-
Advertisement