5 ஆம் தேதி காசு தான் என்னை காப்பாத்துச்சு..!இயக்குனர் ஷங்கர் உருக்கம்..!

0
281
Shanakar

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் மட்டும் தான். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை படைத்தது வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் கடந்து வந்த பாதையை பற்றி இங்கே கொஞ்சம் காணலாம்.

sankar svc

சிறு வயது முதலே சினிமாவில் நுழைய வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சினிமாவில் செல்ல விருப்பம் இல்லாததால் டிப்ளோமாவை முடித்துவிட்டு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். பின்னர் அந்த தொழிற்சாலை மூடப்பட பின்னர் நாடகங்கள்ல நடித்து வந்துள்ளார்.

அதைப் பாத்துட்டு, எஸ்.ஏ.சந்திரசேகரன் சார், அவரை சினிமாவுக்குள்ளே கொண்டு வந்தாரு. அவர்கிட்ட உதவி டைரக்டரா பணி புரிந்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஷங்கர், அப்பாவுக்கு சுத்தமா பிடிக்கல. ஒரு வேலைக்குப் போய் மாசம் பொறந்தா சம்பளம்னு இல்லாம, என்ன இவன் இப்படிப் பண்றான்’னு வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தார்.
இந்த சமயத்துல எஸ்.ஏ.சந்திரசேகர் சாருக்கு தேங்க்ஸ் சொல்லணும். ஏன்னா, எவ்ளோ பிரச்சினைகள் இருந்தாலும், கஷ்டங்கள் இருந்தாலும் மாசாமாசம் 5ம் தேதியானாப் போதும், டாண்ணு சம்பளம் கொடுத்துருவார் சந்திரசேகரன் சார்.
இந்தச் சம்பளம் மாசாமாசம் குறிப்பிட்ட தேதில கிடைக்குதுங்கறதால, அப்பாவுக்கு நிம்மதி. அதன் பிறகுதான், சினிமா வேலையை ஏத்துக்கிட்டாரு அப்பா. சொல்லப்போனா, அந்த 5ம் தேதி சம்பளம்தான் என்னைக் காப்பாத்துச்சு என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.