ஒரே ஒரு படம் இயக்கி ரோட்டில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்த ஷங்கரின் உதவி இயக்குநர்.

0
1064
shankar
- Advertisement -

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நபர் தற்போது ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் தெரு தெருவாக அல்லல்படும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்டம் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சங்கர் தான். இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மாண்டமாகவும், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் இருக்கும். இவருடன் எப்படியாவது பணியாற்ற வேண்டும் பல பேர் ஆசை படுகிறார்கள்.

-விளம்பரம்-
shankar

இந்நிலையில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வேந்திரன் தற்போது ஒருவேளை சோற்றுக்கே பிச்சை எடுக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே சினிமாவின் மீது இருக்கும் ஆர்வத்தினால் பலரும் தங்களுடைய சொந்த ஊரு, குடும்பத்தை விட்டு விட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வருகிறார்கள். அப்படி வந்தவர்களில் சிலர் தான் சினிமாவில் சாதித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

செல்வேந்திரன் குறித்த தகவல்:

பலர் சினிமாவில் சாதிக்க முடியாமல் திரும்பி ஊருக்கே சென்றிருக்கிறார்கள். சில பேர் மனநலம் பாதிக்கப்பட்டும், எப்படியாவது சாதித்து தீர வேண்டும் என்று சென்னையிலேயே அலைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த இயக்குனர் செல்வேந்திரன் தற்போது ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் இருக்கிறார். இயக்குனர் செல்வேந்திரன் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்.

செல்வந்திரன் இயக்கிய படம்:

இவர் 1982 ஆம் ஆண்டு கோவையிலிருந்து சென்னைக்கு வந்தார். முதலில் இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் தான் பணிபுரிய முயற்சி செய்தார். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும், இவர் ஷங்கருடன் சேர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார் . பிறகு கஷ்டப்பட்டு 2009 ஆம் ஆண்டு ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தை இயக்கினார்.

-விளம்பரம்-

செல்வேந்திரன் தற்போதைய நிலை:

அதோடு இந்த படத்தின் மூலம் தான் நடிகர் லட்சுமி ராய்யை இவர் சினிமா துறையில் அறிமுகம் செய்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதற்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை. மேலும், மனம் உடைந்த இயக்குனர் செல்வேந்திரன் சொந்த ஊருக்கு திரும்பாமல் சென்னையிலேயே அலைந்து கொண்டிருக்கின்றார். இன்று அவர் ஒருவேளை சோத்துக்கே வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

செல்வேந்திரன் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இவரை சமீபத்தில் பிரபல ஊடகம் சந்தித்து பேட்டி எடுத்து இருக்கிறது. அதில் அவர், சினிமா தான் என்னுடைய வாழ்க்கை. நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து சினிமாவில் போராடுவேன். விஜய்க்காக கதை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். கண்டிப்பாக விஜய் வைத்து படம் எடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement