தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவரின் அனைத்து படங்களுமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். அதனால் தான் இவரை பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கிறார்கள். சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்து, ஹீரோவுக்கான மாஸ், இதுவரை யாரும் பாத்திராத லொகேஷன்களில் ஷூட்டிங் என அந்த பிரம்மாண்டத்திற்குள் இவை அனைத்தும் அடங்கும்.
இந்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரமுடன் ‘அந்நியன், ஐ’ என இரண்டு மெகா ஹிட் படங்களுக்காக கூட்டணி அமைத்திருந்தார். இதில் ‘அந்நியன்’ திரைப்படம் தான் இவர்களது காம்போவில் வெளி வந்த முதல் திரைப்படம். இந்த படத்தில் ‘சீயான்’ விக்ரம் ‘அம்பி – ரெமோ – அந்நியன்’ என மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் வலம் வந்திருந்தார்.
இதையும் பாருங்க : லாக்டவுனில் படு கிளாமர் உடையில் ஓவியா நடத்திய போட்டோ ஷூட். வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.
இதில் ‘சீயான்’ விக்ரமுக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், பிரகாஷ் ராஜ், நெடுமுடி வேணு, நாசர், சார்லி ஆகியோர் நடித்திருந்தனர். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். 2005-ஆம் ஆண்டு வெளி வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.
சமீபத்தில், இந்த படம் முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘சன் டிவி’-யில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, பல ரசிகர்கள் இப்படத்தை பார்த்து ரசித்ததோடு, #AnniyanOnSunTv என்ற ஹேஸ் டேக்கையும் போட்டு சமூக வலைத்தளமான ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். அப்படி போடப்பட்ட ஸ்டேட்டஸ்களில் பலரும் அப்படத்தை பாராட்டியும், ‘சீயான்’ விக்ரமின் நடிப்பை பற்றி குறிப்பிட்டும் பதிவிட்டிருந்தனர்.
இதையும் பாருங்க : காதல் அழிவதில்லை படத்திற்கு முன்பாவே சினிமாவில் தோன்றியுள்ள சந்தானம். அதுவும் மறைந்த இந்த இளம் நடிகர் படத்தில்.
இந்த படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் ஹீரோயின் சதா தவறு செய்தும், அவரை மட்டும் விக்ரம் கொல்ல மாட்டார். இதை வைத்து ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் படத்தின் இயக்குநர் ஷங்கரை கலாய்த்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அந்த பதிவில் “A Film By Shankar.. லட்சக் கணக்கா வரி கட்டாம ஏமாத்துன நந்தினியை விட்டுட்ட.. பார்க்ல அக்கடான்னு படுத்துட்டு இருந்த சார்லிய கொன்னுட்ட.. என்னப்பா காரணம்..? நூலுங்ங்..” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த மீம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதுவும் பல ரசிகர்கள் இயக்குநர் ஷங்கரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து போஸ்ட் போட்ட வண்ணமிருந்தனர். இதனால் கடுப்பான இயக்குநர் ஷங்கர், அந்த மீம் போட்ட நபரை மட்டும் ப்ளாக் செய்து விட்டாராம். இது தொடர்பாக ப்ளாக் செய்யப்பட்ட அந்த நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் “உங்க பேரை கூட நான் டேக் செய்யலையே மாம்ஸ் இயக்குநர் ஷங்கர்” என்று ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.