இந்தியன் 2 மற்றும் RC15 படப்பிடிப்பை ஒரே நேரத்தில் எடுக்கப்போகிறேன் – ஷங்கர் டீவீட்டுக்கு ராம்சரன் பதில்.

0
294
Shankaar
- Advertisement -

இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்குவதால் ராம்சரனின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருக்கிறது என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவரின் அனைத்து படங்களுமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இறுதியாக இவர் 2018 ஆம் ஆண்டு 2.0 என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-
indian-2

இதை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த படம் பல சூழ்நிலை காரணங்களால் தள்ளி கொண்டே சென்றது . சமீபத்தில் ஒரு பேட்டியில் கமலின் இந்தியன் 2 படம் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று சங்கர் அறிவித்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது சங்கர் அவர்கள் தெலுங்கில் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார்.

- Advertisement -

ராம் சரண்15 படம்:

இதற்கு ‘ராம் சரண்15’ என பெயரிடப்பட்டு இருக்கிறது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதுகிறார். மேலும், படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பான் இந்திய படமாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

படம் குறித்த தகவல்:

தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தில் .அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ராம் சரண் படத்தை இயக்குனர் சங்கர் தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கமலின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில் பல பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

ராம் சரண் படப்பிடிப்பு நிறுத்தம்:

இதை அடுத்து இயக்குனர் சங்கர் அவர்கள் ராம்சரனை வைத்து படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்தியன் 2 படப்ரச்சனைகள் சுமூகமாக முடிக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக இந்தியன் 2 படப்பிடிப்பு பூஜை போட்டு ஆரம்பமானது. விரைவில் படப்பிடிப்பில் கமலஹாசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்குவதால் ராம்சரண் உடைய படத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ராம் சரண் ட்வீட் :

இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வழியில் இயக்குனர் சங்கர் கூறியிருப்பது, ராம்சரனின் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகளும் துவங்கிள்ளது. எனவே எவ்வித இடையூறும் இல்லாமல் இரண்டு படத்தையும் ஒரே சமயத்தில் இயக்க இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதற்கு ராம் சரண் ”எங்களின் படப்பிடிப்பு தளத்தில் உங்களை விரைவில் சந்திக்க காத்திருக்கிறோம்.. இந்தியன் 2 விரைவில் மீண்டும் தொடங்கும் என்று கேட்க ஆவலாக உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement