குடும்பத்தினர் மன உளைச்சல் – தான் கைது செய்யப்படுவதாக வந்த செய்தி குறித்து இயக்குனர் ஷங்கர் உருக்கமான வேண்டுகோள்.

0
1548
shankar
- Advertisement -

தான் கைது செய்யப்பட இருப்பதாக வெளியான செய்தி குறித்து இயக்குனர் ஷங்கர் உருக்கமான அறிக்கையை வெளியிடுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயரை கொண்டவர் இயக்குனர் ஷங்கர் இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே ஹிட் என்றே கூறலாம். தற்போது ரஜினியை வைத்து “எந்திரன் 2” மற்றும் கமலை வைத்து “இந்தியன் 2” போன்ற படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் எடுத்த எந்திரன் முதல் பாகம் மீதுபடத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். 

-விளம்பரம்-

1996 ஆம் ஆண்டு “இனிய உதயம்” தமிழ் பத்திரிகையில், நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன், எழுதிய “ஜுகிபா” என்ற  கதை வெளியானது. அதே கதை மீண்டும் ‘தித் திக் தீபிகா’ என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில்  2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன்” திரைப்படம் வெளியான பின்பு தான் ’ஜுகிபா’ கதை திருடப்பட்டு, எந்திரன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் டைரக்டர் சங்கர் இருவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இதையும் பாருங்க : ஒர்க் அவுட் ஆனதா சோம் கொடுத்த வெத்து சாக்லேட் கவர் – ரம்யா என்ன இப்படி சொல்லிட்டாங்க. வீடியோ இதோ.

- Advertisement -

அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில், எந்திரன் படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் காப்புரிமை சட்டப்படி புகார் அளித்திருந்தார்.இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட சென்னை ஐகோர்ட்டு, தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புகார்தாரர் ஆருர் தமிழ்நாடன் நேரில் ஆஜர் ஆகி வழக்கு விசாரணைக்குத் தயாராக இருப்பதாக வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.ஆனால், இயக்குனர் சங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே எழும்பூர் பெருநகர 2-வது மாஜிஸ்திரேட், டைரக்டர் சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாவும் செய்திகள் வெளியான நிலையில் அதனை மறுத்து இயக்குனர் ஷங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement