மாரி செல்வராஜை பாராட்டி இயக்குனர் சங்கர் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ்.
இவர் பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் மூலம் உலகில் அறிமுகம் ஆனார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்து இருந்தது. அதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்ற எல்லா படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து வெளியாகி இருக்கும் படம் ‘வாழை’. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி மலர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
வாழை படம்:
மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. அதோடு கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் வாழை படம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பிரபலங்கள் பாராட்டு:
இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே மாரி செல்வராஜை நேரில் சந்தித்து பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில பிரபலங்கள் சோசியல் மீடியாவிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குனர் பாலா, மாரி செல்வராஜை கட்டியணைத்து ஆனந்த கண்ணீரில் முத்தமிட்டார். அவரை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ரஞ்சித், வெற்றிமாறன், சூரி உட்பட பலரும் வாழை படத்தை பாராட்டினார்கள்.
இயக்குனர் சங்கர் பதிவு:
இந்த நிலையில் இயக்குனர் சங்கர் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வாழை படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சங்கர், ரொம்ப உறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சினிமாவாக வாழைப்பழம் உள்ளது. அந்த படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் என்னால் வெளியே வர முடியவில்லை. வாழை தாரை சிறுவர்கள் தூக்கி செல்லும் வலியை நம்மால் இங்கு உணர முடிகிறது. இனிமேல் வாழைப்பழங்களை பார்க்கும்போது படத்தில் நடித்தவர்கள் எல்லாம் நினைவுக்கு வருவார்கள்.
வாழை திரைபடத்தை பார்த்துவிட்டு இதயத்திலிருந்து வாழ்த்திய இயக்குனர் திரு . @shankarshanmugh sir அவர்களுக்கு எங்கள் நன்றியும் ப்ரியமும் ❤️❤️❤️ ✨ #VaazhaiRunningSuccesfully #Vaazhaimovie pic.twitter.com/zHVbrfuEkq
— Mari Selvaraj (@mari_selvaraj) August 25, 2024
படம் குறித்து சொன்னது:
எதார்த்தமான சினிமாவில் ஒரு அழகியல் இருக்கிறது. இலக்கியம் போல் வாழை படம் இருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். டெக்னிக்கல் ஆகவும் வாழை திரைப்படம் பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு மாரி செல்வராஜ், வாழை திரைபடத்தை பார்த்துவிட்டு இதயத்திலிருந்து வாழ்த்திய இயக்குனர் திரு.சங்கர் sir அவர்களுக்கு எங்கள் நன்றியும் ப்ரியமும் என்று பதில் அளித்து இருக்கிறார் .