நல்ல படத்தை பார்த்த திருப்தி, இவர் தேசிய விருதுக்கு தகுதியானவர் – பிரபல தமிழ் நடிகரின் படத்தை பார்த்து பாராட்டிய ஷங்கர்.

0
276
shankar
- Advertisement -

மாமனிதன் படம் குறித்து இயக்குனர் சங்கர் போட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. அதோடு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகராக மிரட்டி கொண்டு வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா சமந்தா, உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

விஜய் சேதுபதி நடித்த படங்கள்:

இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்து இருக்கிறது.

மாமனிதன் படம் ரிலீஸ்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி பயங்கர வில்லனாக மிரட்டி இருந்தார். இதனை அடுத்து தற்போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல காயத்ரி, நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்காக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசை அமைத்திருக்கின்றனர். இது விஜய் சேதுபதி- சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் .

-விளம்பரம்-

மாமனிதன் படத்தின் கதை:

மேலும், இப்படத்தின் ரிலீஸ் பலமுறை மாற்றம் செய்யப்பட்டு இன்று வெளியாகி இருக்கிறது. படம் வெளியாகி தற்போது வரை நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. ஒரு தந்தை தன்னுடைய பிள்ளைகளுக்கு எப்படியாவது நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்று போராடுகிறார். அப்போது இடையில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொண்டு அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. ரசிகர்கள் படத்தை பார்த்து தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சங்கரின் டீவ்ட்:

அந்த வகையில் இயக்குனர் சங்கர் அவர்கள் மாமனிதன் படத்தைப் பார்த்து தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, மாமனிதன், ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது. இயக்குநர் சீனுராமசாமி தனது உழைப்பை போட்டு இதை ஒரு யதார்த்தமான கிளாசிக் படமாக எடுத்துள்ளார். விஜய் சேதுபதியின் சிறப்பான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது. மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துடன் ஆத்மார்த்தமாக கலந்துள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார்

Advertisement