இதனால் தான் லோ பட்ஜெட்டில் படம் எடுப்பது இல்லை – ஷங்கர் கூறிய விளக்கம்.

0
780
shankar
- Advertisement -

தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான்.இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து 12 படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் தற்போது வரை பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இயக்குனராக மட்டுமல்லாமல் சொந்தமாக எஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் ஷங்கர். இவர் இயக்கிய முதல்வன் படத்தை இவரே தயாரித்து இருந்தார். அதன் பின்னர் தான் இயக்கும் படங்களுக்கு பிரோடுயூஸ் செய்வதில்லை. தான் இயக்கும் படம் என்றால் பல கோடி பட்ஜெட் கொடுக்கும் ஷங்கர் இவர் தயாரிக்கும் பாடங்கள் எல்லாம் பட்ஜெட்டில் தான் திட்டமிடுவார்.

- Advertisement -

காதல், வெயில், கல்லூரி ஈரம் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்து இருக்கிறார். ஷங்கர் என்றால் கோடிகளில் செலவு செய்வார், அதிலும் டாப் ஹீரோக்களை மட்டும் தான் நடிக்க வைப்பார் என்று விமர்சனங்கள் கூட எழுந்தது. இதனாலேயே இவர் புது முகங்களை வைத்து பாய்ஸ் படத்தை இயக்கினர். ஆனால், அந்த படம் தோல்வியடைந்தது. இப்படி ஒரு நிலையில் ஷங்கரிடம் 5 கோடி ரூபாயில் நீங்கள் படம் எடுக்க முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்த ஷங்கர், இதை நான் சுஜா சார்கிட்டயே சொன்னேன், அதற்கு அவர் ‘அவசியம் என்ன’ என்று கேட்கிறார். எங்கள் வீட்டிலேயே இப்படி ஒரு படம் பண்ணப்போகிறேன் என்று சொன்னால் நாங்க பாக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், 5 கோடி பட்ஜெட்டுக்காக படம் பண்ணக் கூடாது. ஒரு கதைக்கு இவ்வளவு தான் பட்ஜெட் தேவைப்படுகிறது என்றால் அப்போது பண்ணலாம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement