ரஜினி சார் பயோபிக், தினேஷ் நடிப்பு, சுகுமார் இயக்கம் – பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் எக்ஸ்குளூசிவ் பேட்டி

0
51
- Advertisement -

ரஜினி பயோபிக் பற்றி இயக்குனர் சங்கர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் ராம்சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், அஞ்சலி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கேம் சேஞ்சர் படத்தின் கதையை கொஞ்சம் டெவலப் செய்து சங்கர் இயக்கியிருக்கிறாராம். மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தின் வேலைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக உருவான இப்படம் கிட்டத்தட்ட ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியாக காத்திருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

கேம் சேஞ்சர் படம்:

இந்த படத்தை தயாரிப்பளார் தில் ராஜா தயாரித்து இருக்கிறார். இது இவருடைய ஐம்பதாவது திரைப்படம் என்பதால் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இதனுடைய பாடல்களுக்கு மட்டுமே பல கோடி செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சங்கர், எனக்கு பயோபிக் படம் எடுக்கிற ஆசையெல்லாம் இல்லை.

சங்கர் பேட்டி:

அப்படி எடுக்கணும் என்ற எண்ணம் வந்தால் ரஜினி சாரை வைத்து தான் எடுப்பேன். ரஜினி சாரை வைத்து பயோபிக் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இப்பதான் வந்தது. பார்க்கலாம், காலம் தான் பதில் சொல்லணும். அதேபோல் கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் என்னை ரொம்ப இம்ப்ரஸ் செய்த படங்களில் ஒன்று லப்பர் பந்து. அந்த படத்தை பார்த்து நான் ரொம்பவே ஆச்சரியப்பட்டேன். படத்தினுடைய மேக்கிங், ஸ்கிரிப்ட் ரைட்டிங் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.

-விளம்பரம்-

ரஜினி பயோபிக்:

தினேஷுடைய நடிப்பை பார்த்து நான் அசந்தே போய் விட்டேன். அந்த அளவிற்கு அவர் நடித்திருக்கிறார். சொல்லப்போனால், அவர் நடித்தாரா? வாழ்ந்தாரா? என்று தெரியவில்லை. யாருடைய சாயலும் இல்லாமல் அவர் நடித்திருக்கிறார். ஒரு அற்புதமான நடிப்பாக அந்த படத்தில் நான் பார்த்தேன். இந்த தருணத்தில் மொத்த டீமுக்குமே நான் வாழ்த்துக்களை சொல்கிறேன். குறிப்பாக தினேஷுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

புஷ்பா பற்றி சொன்னது:

அதேபோல் புஷ்பா 2 படமும் பார்த்தேன். நன்றாக இருந்தது. புஷ்பா கதாபாத்திரத்துக்கு ஒரு நல்ல ஷேப் கொடுத்து இருக்கிறார்கள். பெரிய ரீச் ஆகியிருக்கிறது. சுகுமார் மேல வைத்திருந்த எதிர்பார்ப்பை அவர் சரியாக பூர்த்தி செய்து இருக்கிறார் என்று தான் சொல்லணும் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement