தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி தள்ளிய பிரபல தமிழ் பட இயக்குனர் !

0
745
- Advertisement -

இந்தியா-இலங்கை-வங்கதேசத்திற்க்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு டி20யின் இறுதிப்போட்டி இந்தியா-வங்கதேசத்திற்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 166 ரன்களை குவித்தது.

-விளம்பரம்-

- Advertisement -

பின்னர் களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில்ளான வெற்றி பெற்றது.இதற்கு முழு காரணமும் இந்திய அணியின் தினேஷ் கர்திகையே சாரும்.இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணியை தனது சிறப்பான ஆட்டத்தால் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் தினேஷ் கார்த்திகை பலரும் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழக இந்திய வீரரான தினேஷ் கார்த்திகை பாராட்டியுள்ளார். பொதுவாக சினிமைவை தவிர வேறு எந்த துறையை பற்றியும் பெரிதாக பேசும் பழக்கம் இல்லாதவர் ஷங்கர். முதன் முதலில் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட பதிவு ஒன்றை பதிவிட காரணம் தினேஷ் கார்த்திக் தான்.சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.அந்த பதிவில் என்ன ஒரு மறக்கமுடியாத ஆட்டம்,பேட்ஸ்மேனுக்கு பாராட்டுக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement