அஜித்துடன் மீண்டும் இயக்க திட்டமா? இயக்குனர் சிவா பேட்டி.!

0
760
- Advertisement -

இயக்குனர் சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து படமெடுத்துள்ளார். அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் என்ற பெருமையை கொண்டவர் சிவா தான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிவா, விஸ்வாசம் மற்றும் அஜித் குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

அப்போது அஜித்துடன் மீண்டும் இணைய திட்டம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டபோது, அஜித், ஒரு நல்ல மனிதர். சிறந்த நடிகர். அவரை வைத்து 4 படங்களை இயக்கியதில், சந்தோஷம். ஐந்தாவதாக மேலும் ஒரு படத்தில் இணைந்தால், அது வரம்.

- Advertisement -

மேலும், விஸ்வாசம் படம் குறித்து பேசுகையில்,
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞராக அஜித் நடித்து இருக்கிறார். அந்த மண்ணின் மைந்தராக-மதுரை தமிழ் பேசி நடித்துள்ளார். படத்தின் கதை 2 கால கட்டங்களில் நடக்கிறது. அதில், நிரஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருக்கிறார். மும்பை, தேனி ஆகிய 2 இடங்கள் தொடர்பான காட்சிகளில் அவர் வருவார்.

மேலும், அஜித் கைப்பட பிரியாணி செய்து பரிமாறுவார் என்று சொல்வார்கள். ‘விஸ்வாசம்’ படத்திலும் அது நடந்ததா? என்று கேட்கப்பட்டதற்கு, அது, நிறைய முறை நடந்தது. 250 பேர்களை கொண்ட படக்குழுவினர் அனைவருக்கும் அஜித் பிரியாணி தயாரித்து பரிமாறினார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement