வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா மற்றும் அஜித் நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் சேர்ந்துள்ளனர். தற்போது இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவலை தெரிவித்துள்ளார் இயக்குனர் சிவா.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சிவா விஸ்வாசம் படம் குறித்து பேசுகையில், இந்த படத்தில் அஜித் அஜித்திற்கு இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்ற அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து பேசிய சிவா, இந்த படம் தேனீ மாவட்டத்தில் நடக்கின்ற ஒரு கதை. ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது அன்பாய் இருப்பதை விட விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்பதை தான் இதில் ஆணித்தனமாக சொல்லி இருக்கிறோம்.
இந்த படத்தில் நடிகர் அஜித், தூக்குத்தூரை என்ற முரட்டு தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுரை பாஷையில் பேசி அசத்தியுள்ளார் . இதற்காக சந்திரன் என்பவரிடம் பயற்சி மேற்கொண்டார் அஜித். முதல் பாதியில் கிராமத்திலும் இரண்டாம் பாதி நகரத்திலும் கலக்குகிறார். நயன்தாராவிற்கு வெயிட்டான வேடம்,