நெஞ்சுக்கு நீதி பட நடிகையை திருமணம் செய்த 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் பட இயக்குனர்.

0
369
sriganesh
- Advertisement -

இயக்குனர் ஸ்ரீ கணேஷ்-நடிகை சுகாசினி சஞ்சீவ் திருமணம் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனதாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஸ்ரீ கணேஷ். இவர் இயக்குனர் மிஷ்கின் இடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருந்தார். அதற்கு பிறகு தான் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் இயக்கிய முதல் படம் எட்டு தோட்டாக்கள். இந்த படத்தை எம் வெள்ள பாண்டியன் தயாரித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் வெற்றி, எம் எஸ் பாஸ்கர், நாசர், அபர்ணா பாலமுரளி, மணிகண்டன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் குருதி ஆட்டம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி, வாட்சன் சக்கரவர்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் திரைப்பயணம்:

கதை- அதிரடி திர்லர் பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராக் போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீ கணேஷுக்கு திருமணம் நடந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

சுஹாசினி சஞ்சீவ் நடித்த படம்:

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அவர்கள் நடிகை சுகாசினி சஞ்சீவை நீண்ட நாட்களாக காதலித்து வந்திருந்தார்.
சுகாசினி சஞ்சீவ் வேற யாரும் இல்லைங்க, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஸ்ரீ கணேஷ்- சுஹாசினி சஞ்சீவ் திருமணம்:

போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். இது இந்தியில் வெளிவந்த ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக் படம். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று இயக்குனர் ஸ்ரீ கணேஷ்-நடிகை சுஹாசினி சஞ்சீவ் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர்களுடைய திருமணத்தில் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement