சாவர்க்கர் பற்றிய சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்டு இயக்குனர் சுதா கொங்கரா பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக சுதா கொங்கரா திகழ்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் சாவர்க்கர் குறித்து சுதா கொங்கரா பேசிய விஷயம் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இயக்குனர் சுதா, பெண் கல்வி ரொம்ப முக்கியம்.

இந்துத்துவ அமைப்புகளின் கொள்கை முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர் சாவர்க்கர். இவர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். இவர் அந்த காலகட்டத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து சமூக எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன்னுடைய மனைவியை படிக்க ஊக்குவித்தார். அதோடு அவர் ஊரில் அனைவருமே பெண்கள் படிப்பதற்கு எதிராக இருந்த போதும் தன்னுடைய மனைவிக்கு உறுதியாக இருந்து படிக்க வைத்தார் என்று கூறியிருந்தார்.
சுதா கொங்கரா பேட்டி:
இப்படி இவர் பேசியிருந்தது தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. காரணம், பெண்கள் கல்விக்காக மற்றும் ஒடுக்கப்பட்டோருக்காக போராடியவர் ஜோதிபா புலே. இவர் சாவித்திரி பாய் புலேவின் கணவர் ஆவார். அந்த காலகட்டத்தில் சமூக எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன்னுடைய மனைவி சாவித்திரி பாய் புலே கல்வி கற்க வேண்டும் என்று ஊக்கம் அளித்து, அவருக்கு உறுதுணையாக இருந்தவர். மேலும், சாவித்திரிபாய் புலே தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.
உண்மை கதை:
பல எதிர்ப்புகளுக்கும், பிரச்சனைக்கும் மத்தியில் இவர் படித்தவர். இவர் படிக்கும்போது ஊர் மக்கள் எல்லாம் இவர் மீது கற்களை வீசி எறிந்தார்கள். இருந்தாலுமே போராடி படித்தவர். பின் போராடி பெண்களுக்கு கல்வி முக்கியம் என்று கற்றுக் கொடுத்தவர்கள் ஜோதிபா புலே, சாவித்திரிபாய் புலே. இதைதான் இயக்குனர் சுதா அவர்கள் சாவர்க்கர் என்று மாற்றி சொல்லிவிட்டார். இதை தான் நெட்டிசன்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இயக்குனர் சுதா பதிவு:
இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் சுதா அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அப்படி பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என்து தவறு தான்.
என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில்…
— Sudha Kongara (@Sudha_Kongara) July 27, 2024
மன்னிப்பு கேட்ட சுதா:
எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன் என்று கூறி இருக்கிறார். தற்போது இவரின் இந்த மன்னிப்பு பதிவு தான் வைரலாகி வருகிறது.






