கை கூடிய காதல் – பாண்டிச்சேரியில் எளிமையான முறையில் திருமணத்தை முடித்த இயக்குனர்.

0
2077
director
- Advertisement -

கன்னட திரை உலகில் மிக பிரபல இயக்குனர்களில் ஒருவராக சுமனா கித்தூர் திகழ்கிறார். இவர் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா கித்தூரை சேர்ந்தவர். இவர் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இவர் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான Kallara Santhe திரைப்படம் சிறந்த கன்னட திரைப்படத்திற்கான ஜூரி விருதை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கிய Edegarike சிறந்த கன்னட திரைப்படம் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றுது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், இவர் பல வருடங்களாக புகைப்பட கலைஞர் சீனிவாசை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். பின் இவர்கள் திருமணம் ஏப்ரல் மாதம் சிவமோகவில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. ஊரடங்குக்கு முன்பு இவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்றிருந்தனர்.

- Advertisement -

பின் ஊரடங்கால் இவர்களால் கர்நாடகம் திரும்ப முடியாமல் போனது. இதனால் இவர்கள் அங்கேயே சிக்கிக் தவித்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் சுமனா கித்தூரும், சீனிவாசும் புதுச்சேரியிலேயே தங்களுடைய திருமணத்தை எளிமையாக செய்து கொண்டனர். பின் இதை சுமனா கித்தூர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது காதலனை கரம்பிடித்த திருமண புகைப்படங்களை வெளியிட்டார்.

அதில் அவர் கூறி இருப்பது, எங்களது திருமணம் புதுச்சேரியில் எளிமையாக நடந்தது. இதில் இரு குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டனர் என்று தெரிவித்துள்ளார். தற்போது சுமனா கித்தூர்- சீனிவாசின் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னட திரைப்பட பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இவரின் புகைப்படங்கள் வெளியானதும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement