‘மதகஜராஜா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் சுந்தர் சி பேசியிருக்கும் விஷயங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் அஞ்சலி, வரலட்சுமி, மணிவண்ணன், மனோ பாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கும் படம் தான் ‘மதகஜராஜா’. கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட இப்படம், பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியதால் வெளியாகாமல் இருந்தது. இப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தற்போது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கலை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி இப்படம் வெளியாகும் என பட குழு அறிவித்திருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர். சி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுந்தர் சி, ‘இந்தப் படத்துக்காக எப்போதோ சந்தித்திருக்க வேண்டியது. கொஞ்ச நாள் முன்னாடி திருப்பூர் சுப்ரமணியம் தனக்கு கால் பண்ணி ‘மதகஜராஜா’ படம் பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னாரு.
சுந்தர் சி பேசியது :
எப்போதும் கலெக்ஷன் குறித்து அதிகமாக பேசும் அவர் இந்தப் படத்துக்கு விமர்சனம் தெரிவித்திருந்தார். இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்தப் படத்தின் மூலமாக தான் விஷால் தம்பி கிடைத்தார். இப்போ அவன் எங்க குடும்பத்துல ஒருத்தனாக இருக்கிறான். 80ஸ் காலகட்டங்களில் வரும் ஜனரஞ்சகமான போல ஒரு படம் பண்ணனும் நினைச்சேன். அதுதான் ‘மதகஜராஜா’. சில காரணங்களால் இந்த படத்தை அப்போ ரிலீஸ் பண்ண முடியாம ஆச்சு. இந்தப் படம் குறித்து அறிவிப்பு வந்ததும், சமூக வலைதள பக்கங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. அது எனக்கு நம்பிக்கையைக் கொடுக்கிற மாதிரி இருந்துச்சு.
மதகஜராஜா குறித்து:
மேலும், இந்த படம் ஒரு நல்ல என்டர்டெய்னர். ‘லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா போட்டாங்க’, அப்படி இருக்கும். என்னுடைய குருநாதர் மணிவண்ணன் சாரும் இந்த படத்தில் நடித்திருக்கிறாரு. அவருடைய ஆசிர்வாதம் இந்தப் படத்துக்கு கண்டிப்பாக இருக்கும். அதே மாதிரி மனோபாலா சாரும் இந்தப் படம் வந்தால் என் ரேஞ்சே வேற என சொல்லிட்டே இருப்பாரு. ஆனா, இப்போ அவர் நம்ம கூட இல்லை. முதல் முறையாக விஜய் ஆண்டனி கூட இந்தப் படத்துல நான் இணைந்தேன். அவர் நடிகராக இப்போ கலக்கிட்டு இருக்காரு. மறுபடியும் அவர் இதுபோல படங்களுக்கு இசையமைத்து கம்பேக் கொடுக்கணும்.
விஷால் குறித்து:
இந்த படத்திற்காக விஷால் 8 பேக் வைக்கணும். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த காட்சியோடு சூட்டிங் தள்ளிப் போயிடுச்சு. அத்தனை நாட்கள் அந்த உடம்பை அவர் மெயின்டைன் பண்றதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தார். இந்த படம் வெளியே வரவேண்டும் என்று நான் நினைச்சதுக்கு காரணமே விஷாலோட உழைப்பு வெளியே தெரியணும் என்பதற்காக தான். இந்தப் படத்துல எந்த விஷயத்தையும் புதுசாக சொல்ல போறது இல்ல. ஆனால், நல்லா என்ஜாய் பண்ணி ரசித்து பாப்பீங்கன்னு நம்புறேன் என்று சுந்தர்சி பேசியிருக்கிறார்.
விஷால் பேசியது:
அதைத்தொடர்ந்து பேசிய நடிகர் விஷால், எனக்கு ஆக்டர் விருதைத் தாண்டி பெஸ்ட் சிங்கர் அவார்ட் இந்தப் படத்துக்கு கிடைக்கணும். ‘மை டியர் லவ்வர்’ பாட்டைப் பாடற சிங்கர் இதுக்கு மேல பாடவே கூடாதுன்னு சுந்தர் சியும், விஜய் ஆண்டனியும் பேசுனாங்க. எனக்கு விஜய் ஆண்டனியை ராஜாவாகத்தான் தெரியும். எங்க வீட்டிலேயே, ‘பாட்டு பாடி எதுக்கு விஷப்பரிட்சை எடுக்கிற’ என்று கேட்டார்கள். ஊட்டில 12 வருஷத்துக்கு ஒருமுறை எப்படி குறிஞ்சிப் பூ பூக்குமோ, அதே மாதிரி தான் ‘மதகஜராஜா’ என்று விஷால் பெருமையோடு பேசி இருக்கிறார்.