இயக்குனராவதற்கு முன்பாகவே படத்தில் சுசீந்திரன். அதுவும் இவர் படத்தில். புகைப்படம் இதோ.

0
745

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா, நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களை கொடுத்து உள்ளார்.

கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளி வந்த “கென்னடி கிளப்” மற்றும் “சாம்பியன்” ஆகிய இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த இரண்டு படமும் விளையாட்டை மையமாக வைத்த கதை. இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் நடித்த படத்தின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

- Advertisement -

எழில் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் ஜெயம் ரவி, பாவனா, ரகுவரன், விஜயகுமார் உள்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் போகாதே போகாதே என்ற பாடல் இடம் பெற்று இருக்கும். இந்த பாடலில் ஒரு காட்சியில் இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் நடித்திருப்பார்.

தற்போது அந்த காட்சியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த அனைவரும் சுசீந்திரனா இது!! என்று வியப்பில் கேட்டுள்ளார்கள். தற்போது இயக்குனர் சுசீந்திர அவர்கள் தனது அடுத்த படத்தின் கதைக்கு தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக பேசப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement